கடந்து போன காலங்கள்(8)
வாழ்வில் மறக்க
இயலாத ஆசிரியர்கள்....
வாழ்கின்ற நாளெல்லாம்
மனதில் நிலைத்து
நிற்கும் ஆசிரியர்கள்
சிலர் உண்டு .....
சாப்டூர் அரசு
உயர் நிலைப்பள்ளியில்
மறக்க இயலா ஆசிரியர்
மூக்கையா வாத்தியார்....
ஐந்தாம் வகுப்புவரை
ஏ,பி,சி,டி-கூடத் தெரியாமல்
வரும் மாணவர்களுக்கு
ஆங்கிலத்தை அப்படி
ஒரு கரிசனத்தோடு
கற்றுத்தரும் ஆசிரியர் அவர்...
அவர் கொடுத்த அடித்தளம்தான்
இன்று எங்கெங்கும்
பல்வேறு உயர் பதவிகளில்
நிறைந்து கிடக்கும்
எங்கள் ஊர்ப் பள்ளியின்
பழைய மாணவர்கள் என்பேன் நான்....
அடித்தும் கண்டித்தும்
நிலைமையை எடுத்துச்சொல்லியும்
எப்படியேனும் படிக்கும்
மாணவர்களைப் படிக்க
வைத்த ஆசிரியர் மூக்கையா வாத்தியார்....
நெஞ்சம் நிறைந்த நன்றி
அவருக்கு உண்டு என்றும் என் வாழ்வில்
செஸ் விளையாட அழைத்து
10 நகர்வுக்கு முன்பே
10-வது நகர்வில் உன்னை
ஜெயிக்கப்போகிறேன்
எனச்சொல்லி நம்பிக்கை ஊட்டும்
சுப்பிரமணிய வாத்தியார்
இலக்கணத்தை தமிழில்
இயல்பாகக் கற்கும்படி
கற்றுக்கொடுத்த
தமிழய்யா குழந்தைவேல்
எனப் பல ஆசிரியர்களின்
முகங்கள் இன்றும்கூட
மறவாமல் கண்முன்னே
தோன்றுகிறது
கை எடுத்து கும்பிடத்
தோன்றுகிறது எப்போதும்
அவர்களின் பணிக்கு....
வா. நேரு - 16.06.2016.
வாழ்வில் மறக்க
இயலாத ஆசிரியர்கள்....
வாழ்கின்ற நாளெல்லாம்
மனதில் நிலைத்து
நிற்கும் ஆசிரியர்கள்
சிலர் உண்டு .....
சாப்டூர் அரசு
உயர் நிலைப்பள்ளியில்
மறக்க இயலா ஆசிரியர்
மூக்கையா வாத்தியார்....
ஐந்தாம் வகுப்புவரை
ஏ,பி,சி,டி-கூடத் தெரியாமல்
வரும் மாணவர்களுக்கு
ஆங்கிலத்தை அப்படி
ஒரு கரிசனத்தோடு
கற்றுத்தரும் ஆசிரியர் அவர்...
அவர் கொடுத்த அடித்தளம்தான்
இன்று எங்கெங்கும்
பல்வேறு உயர் பதவிகளில்
நிறைந்து கிடக்கும்
எங்கள் ஊர்ப் பள்ளியின்
பழைய மாணவர்கள் என்பேன் நான்....
அடித்தும் கண்டித்தும்
நிலைமையை எடுத்துச்சொல்லியும்
எப்படியேனும் படிக்கும்
மாணவர்களைப் படிக்க
வைத்த ஆசிரியர் மூக்கையா வாத்தியார்....
நெஞ்சம் நிறைந்த நன்றி
அவருக்கு உண்டு என்றும் என் வாழ்வில்
செஸ் விளையாட அழைத்து
10 நகர்வுக்கு முன்பே
10-வது நகர்வில் உன்னை
ஜெயிக்கப்போகிறேன்
எனச்சொல்லி நம்பிக்கை ஊட்டும்
சுப்பிரமணிய வாத்தியார்
இலக்கணத்தை தமிழில்
இயல்பாகக் கற்கும்படி
கற்றுக்கொடுத்த
தமிழய்யா குழந்தைவேல்
எனப் பல ஆசிரியர்களின்
முகங்கள் இன்றும்கூட
மறவாமல் கண்முன்னே
தோன்றுகிறது
கை எடுத்து கும்பிடத்
தோன்றுகிறது எப்போதும்
அவர்களின் பணிக்கு....
வா. நேரு - 16.06.2016.
3 comments:
தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். மகிழ்ச்சி!
நன்றி கதிர்வேல் சார். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
எளிமையும், இனிமையுமாய் அன்புடன் பழகும் , குவைத்தில் பொறியாளராக உயர்பதவி வகிக்கும் அண்ணன் ஜோதி மதிவாணன் அவர்களின் கருத்து (-பேஸ் புக்கில் வந்தது)
"Very true words about great teachers of Saptur high school.Even in elementary school there were great teachers like Maruthappan sir,Muthukrishnammal teacher and others "
Post a Comment