Thursday, 1 December 2016

மதுரையில் உடல் கொடை -தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 84-ஆம் ஆண்டு பிறந்த நாள்(02.12.2016) விழா


மதுரை, டிச. 1- தந்தை பெரியா ருக்குப்பின் தந்தை பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகம் இருக்குமா? இயங்குமா? என அய்யம் எழுப்பியவர்களின் அய்யப்பாடுகள் எல்லாம் நீர்த் துப்போகும்வண்ணம் தந்தை பெரியாரின் கொள்கைகளை தமிழகத்தில், இந்தியாவின் பல மாநிலங்களில், பெரியார் பன்னாட்டு மய்யங்கள் மூல மாக உலகத்தின் பல நாடுகளில் கொண்டு சென்ற,  அய்யாவின் அடிச்சுவட்டில் தொய்வில்லா மல் தொடர்ந்து செல்லும் திரா விடர் கழகத்தின் தலைவர் தமி ழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்களின் 84-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் தொடக் கம் மதுரையில் உடல் கொடை வழங்கும் உறுதிப் படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி இந்திய செஞ் சிலுவை சங்கத்தோடு இணைந்த விழாவாக  30.11.2016 காலை யில் நடந்தது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழா வில் திராவிடர் கழக, பகுத்த றிவாளர் கழகப்பொறுப்பாளர் கள் ஏற்கனவே உறுதி மொழி படிவங்களை வாங்கி புகைப் படம் ஒட்டி, தங்கள் வாரிசு களிடம் கையெழுத்து பெற்று வாங்கி வந்திருந்த படிவங் களை மதுரை மருத்துவக் கல் லூரி முதல்வர் டாக்டர் வைர முத்துராஜாவிடம் வழங்கினர்.

விழாவில் கழக தலை மைச்செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா தனது தாயா ரின் உடலை, அவர் இறந்த வுடன் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு உடல்கொடையாக வழங்கியதையும், தான் பத் திரப்பதிவு அலுவலகத்திலேயே உயிலாக தனது உடல்கொ டையை பதிந்திருப்பதையும் எடுத்துக்கூறினார். விழாவினை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்த திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர், வே. செல்வம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பல்வேறு சிறப்புகளை  எடுத்துக்கூறினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு, மிகச்சிறந்த எழுத் தாளர், பேச்சாளர், பல்கலைக் கழக வேந்தர் எனப் பல பரி மானங்கள் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு இருந் தாலும் தந்தை பெரியாரின் தொண்டன் என்பதையே தனது அடையாளமாகக் கொள்பவர். தந்தை பெரியார் தந்த புத்தியே போதும் என்பவர்.வாழ்வியல் சிந்தனைகள் நூல்களில் தொடர்ந்து குருதிக்கொடை, விழிக்கொடை, உடல்கொடை, உடல் உறுப்புகள் கொடை பற்றி எழுதி வருபவர். அவரின் பிறந்த நாளில் அவர் கூறும் தொண்டறத்தின் அடிப்படை யில் இந்த உடல் கொடை வழங்குகிறோம் என்றார்.

திராவிடர் கழகத்தின் தலை மைச்செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா, மாநில அமைப் புச்செயலாளர் வே.செல்வம், மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் வா.நேரு, திராவிடர் கழக மண்டலத் தலைவர்  அ.முருகானந்தம், மண்டலச்செயலாளர் மா.பவுன் ராசா, மதுரை மாவட்டத் தலைவர் சே.முனியசாமி, செயலாளர் அ.வேல்முருகன்,  இணைச்செயலாளர் ந.முரு கேசன்,பகுத்தறிவாளர் கழக மாவட்டச்செயலாளர் பெரி.காளியப்பன், கல்விக் கொடை வள்ளல் ஹார்விபட்டி இராம சாமி, மகளிரணி இராக்கு, சுமதி செல்வம், விஜயராணி, சுகுணா ஜெகதீசன், அண்ணா நகர் மணி ராசு, லோகேசு, பக லவன் ஆட்டோ தங்கராசு, போட்டோ இராதா, சிவா, ஜெக தீசன், மருத்துவர் சு.ச. அன்பு மதி, விராட்டிபத்து சுப்பையா, நல்லதம்பி, மதுரை இராம சாமி, ‘புத்தகத்தூதன்’ பா.சட கோபன், மாரிமுத்து, முனிச் சாலை மாரி,தங்கம்  உள்ளிட்ட தோழர்கள், தோழியர்கள்   உறுதி மொழிப்படிவங்களை வழங்கினர்.

ரெட் கிராஸ் சொஸைட்டி யைச்சார்ந்த குருதிக்கொடை மா.சோசு அவர்கள், பெரி யாரின் தொண்டர்கள் வாழ் வில் சிறப்பாகவும், எடுத்துக் காட்டாகவும் வாழக்கூடியவர் கள். சடங்குகளை முற்றிலுமாக புறக்கணிப்பவர்கள். தங்கள் குடும்பத்தினரையும் அப்ப டியே பக்குவப்படுத்துகிறவர் கள். மற்றவர்கள் 100 பேர் உடல்கொடை உறுதிப் படிவம் கொடுத்தால் அதில் 20 சதவீதம் தான் வரும். ஆனால் தந்தை பெரியாரின் தொண்டர்கள் கொடுக்கும் உடல்கொடை உறுதிப்பத்திரத்தின்படி 100க்கு நூறு சதவீதம் மதுரை மருத்து வக்கல்லூரிக்கு வரும் என்று உறுதி அளிக்கிறேன் என்று உரையாற்றினார்.  மதுரை மருத்து வக்கல்லூரி முதல்வர் டாக்டர் வைரமுத்து ராசு அவர்களின் அலுவலகத்திலேயே நடை பெற்ற விழாவில் அன்புடன் அனைவரையும் வரவேற்ற முதல்வர் டாக்டர் வைரமுத்து ராசு அவர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கி உபசரித்து, உடல் கொடை விழிப்புணர்வுக் காக தமிழக அரசின் சார்பாக பல்வேறு விழாக்களை நடத்து கின்றோம். அந்த வகையில் தானாக மனமுவந்து இவ்வளவு பேர் உடல் கொடை வழங்க முன்வந்தமை பாராட்டுக்குரி யது , மகிழ்ச்சிக்குரியது எனத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.விழாவில்  மதுரை மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வர், உடல்கூறியல் துறைத் தலைவர் மற்றும் மருத்துவக்கல் லூரி ஊழியர்கள்   ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த னர்.தோழர்களின் உடல் கொடை பற்றிய பல்வேறு சந்தேகங்க ளுக்கு பொறுமையாகவும் நிறை வாகவும் மதுரை மருத்துவக்கல் லூரியின் முதல்வர், துணை முதல்வர், துறைத்தலைவர் ஆகியோர் விளக்கமளித்தனர்.

நன்றி : விடுதலை 01.12.2016


No comments: