Saturday, 22 March 2025

யோசித்துக்கொண்டிருக்கிறேன்...

 தோழர்,இந்தக் கவிதை

என்னைப் பற்றி

எழுதியதுதானே என்றார் அவர்..

மறைக்க இயலவில்லை..

ஆமாம் என்றேன் மெல்லிய குரலில்

எளிதில் கண்டுபிடிக்கும்

நிலையில்தான் எனது

கவிதைக்கருவும் கதைக்கருவும்…

என்னைச் சுற்றி நிகழும்

நிகழ்வுகளே என் கவிதைக்குள்ளும்

என் கதைக்குள்ளும்…

எங்கோ நிகழ்வுவதுபோல்

எழுதுதல் வேண்டும் எனும்

அறிவுரைப்படி எல்லாம்

எழுதிப்பார்க்கிறேன் ஆனாலும்

எளிதில் அடையாளம்

கண்டு கொள்கிறார்கள்..

எவரையும் இழித்துப் பழித்து

எழுதுவதில்லை எனினும்

என் செய்வது ? எழுதலாமா?

எழுதுவதை நிறுத்தலாமா?

என யோசித்துக்கொண்டிருக்கிறேன்..

                                      வா.நேரு,22.03.2025

4 comments:

Anonymous said...

எது எப்படிப் போனாலும் எழுதுவதை மட்டும் நிறுத்தி விட வேண்டாம் அண்ணா.... அது உங்களால் முடியாது!

கவி said...

எவரையும் இழித்துப் பழித்து எழுதுவதில்லை எனும்போது யாரோ ஒருவருக்கு அக்கறையுடன் தரப்பட்ட தங்கள் ஆலோசனையாகவும், அறிவார்ந்த செயல்பாடுகளின் அறிமுகமாகவும், தங்கள் எழுத்து இருக்கும் என்பதால் தங்கள் மொழியிலேயே நாங்களும் சொல்கிறோம்; எழுதுங்கள் எழுதுங்கள் எழுதுங்கள்... எவரையும் யோசிக்க வைக்கும் என்பதால் எழுதுங்கள்!

வா.நேரு said...

நன்றிங்க அம்மா...

வா.நேரு said...

ஆமாம் தங்கையே...எழுதுவோம் @வி.இளவரசி சங்கர்.