Wednesday, 25 December 2024

டிசம்பர் 25...

அண்ணல் அம்பேத்கர்

மநுநீதியை எரித்த நாள்...

வெண்மணியில் 44பேர்

அநியாயமாய் எரிக்கப்பட்ட நாள்…

எரிப்பவர்களை எரிப்பதற்குத்

தூண்டும் நூலை

எரித்துக் காட்டினார் அண்ணல்..

இன்றும் ஊடகத்தின்

நேரலையில் மநுநீதியை

எரித்த பெண்ணிற்கு எதிராய்

குய்யோ முறையோ என்று

கூக்குரலிடுகிறது பார்ப்பனியம்!

 

வெண்மணியில் எரித்த நாயை

வெட்டி எரித்துக்காட்டி அந்நாளில்

சிறைபட்ட கருஞ்சட்டைத்

தோழர்களுக்கு செவ்வணக்கம்!

அவர்களுக்காக வாதாடிய

குடந்தை ஆர்.பி.எஸ்.ஸ்டாலினுக்கு

வீரவணக்கம்! வீரவணக்கம்!

                                   வா.நேரு,25.12.2024

                                   குறுங்கவிதை(38)


No comments: