அவர் கேட்ட
கேள்விகளுக்கு
இன்றும் பதிலில்லை...
அவர் மீது வீசப்படும்
அவதூறுகளுக்கு
கொஞ்சமும் குறைவில்லை...
செத்துப்போய்..
இல்லை..இல்லை..
உடல் சத்துப்போவதே
செத்துப்போவது
என்ற பெரியாரின்
51வது நினைவு நாள்...
நவீனக் கவிதைகளா?..
பறை இசையா?...
கானாப்பாடல்களா?..
அனைத்திலும் பெரும்
உற்சாகத்தோடு
பெரியாரைக் கொண்டாடும்
பேரன் பேத்திகளால்
பெரும் சிரிப்புச்
சிரிக்கிறார் பெரியார்...
பழங்கதைகள் பேசும்
அவதூறுகள் வீசும்
வெங்காயங்களைக்
கண்டு...
வா.நேரு, 24.12.2024
குறுங்கவிதை(37)
No comments:
Post a Comment