பகுத்தறிவு அடிப்படையில்
இதுவும் ஒரு நாளே எனினும்
புதிது புதிதாய் மனிதர்கள்
சபதம் எடுக்கும் நாளிது…
எழுதுவேன், நடப்பேன்,
அளவாக உண்பேன்,
இதமாகப் பேசுவேன்
இப்படி எத்தனையோ
உறுதிமொழிகள் நமக்கு
நாமே எடுத்துக் கொள்ளும் நாளிது!
எடுக்கும் உறுதிமொழிகளை
நமக்கு நாமே நாளும்
நிறைவேற்றும்
இனிய வருடமாய்ப் பிறக்கும்
இந்த வருடம் அமையட்டும்!
புத்தாண்டு வாழ்த்துகள்…
முனைவர் வா.நேரு,31.12.2024..இரவு
குறுங்கவிதை
3 comments:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நெல்லை கவிநேசன்
நன்றிங்க சார்.தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Post a Comment