Thursday, 26 December 2024

ஒரே பதில்...



நினைவுகளை எப்படிப்

பத்திரப்படுத்துவது?...

உள்ளத்து உணர்வுகளை

எதிர்காலத்து மனிதர்களுக்கு

எப்படிக் கடத்துவது?...

வாழ்வின் இனிப்புகளை

அடுத்தவர்கள்  மனதிற்குள்

கொண்டு சென்று

இனிக்க வைப்பது எப்படி?

கொடுமை கண்டு கொதிக்கும்

 நம் மனதின் வெப்பத்தை

அடுத்தவர்களும் உள்வாங்கி

செயல்படவைப்பது எப்படி?

எல்லாவற்றிற்கும் பதில் ஒன்றுதான்...

எழுதுவது ,எழுதுவது ,எழுதுவது...

ஏதோ ஒரு இலக்கிய வடிவில் எழுதுவது

என்பதே ஒரே பதில் 

அத்தனை  கேள்விகளுக்கும்...


                                                                          வா.நேரு,26.12.2024

                                                                           குறுங்கவிதை(39)


No comments: