‘செனையாக்குதல்’ என்னும்
சொல்லை
வைத்து
கடவுள்
அவதாரங்களின்
பிறப்புக் கதைகளோடு
…
சிலம்பம்
ஆடுகின்றார்
பெரியார்…
‘அசுவமேதயாகம் ‘ செய்த
தசரதனும்
அதற்கு உடன்பட்ட
அவனது
பத்தினிகளும்..
‘குறி’ கொடுத்த செத்த குதிரைகளும்
காணிக்கை
வாங்கிய பார்ப்பனர்களும்…
‘செனையாக்குதல்’ என்னும்
சொல்லுக்குள்
சிக்கிச்
சிதறுண்டு கதறுகிறார்கள்…
வால்மீகி இராமயணத்தைப்
படித்த நம்மவர்கள் நமட்டுச்
சிரிப்போடு கடக்கின்றார்கள்…
வா.நேரு ,23.12.2024
குறுங்கவிதை(36)
நன்றி: தந்தை பெரியாரின் 'சிந்தனையும் பகுத்தறிவும்' நூல்
No comments:
Post a Comment