Sunday, 15 December 2024

கூலிப்படை வேலைக்கும்...

 





எமதர்மன் கோவிலுக்குச்

சென்று வந்தேன் என்றாள்..

எதற்கு என்றேன் நானும்..

வயதான என் தந்தையை

சீக்கிரம் வந்து கூட்டிச்செல்

என்று முறையிட்டு வந்தேன்..என்றாள்

காப்பாற்றத்தான் கடவுள் என்பீர்கள்..

கூலிப்படை வேலைக்கும்

அவர்தானா? எனும் கேள்விக்கு

சிரிக்கிறாள் அவள்


                         வா.நேரு,16.12.2024

                         குறுங்கவிதை(30)


                     

No comments: