நம்பு நண்பா, நம்பு
ஆத்திகத்தில்
திளைத்து எழும்
அருமை நண்பா நம்பு…
இந்நாட்டில்
நாம் படும் துன்பத்திற்கெல்லாம்
முதலாளித்துவம் காரணமல்ல…
பார்ப்பனியம் காரணமல்ல..
வர்ணமும் அது வகுத்துக் கொடுத்த
ஜாதிய அடுக்குமுறையும்..
அது தொடுக்கும் ஒடுக்குமுறையும்
காரணமல்ல!
ஆத்மாவுக்குள் கர்மா
கர்மாவுக்குள் சொத்து காமம் காசு
தாய்வழிக் கர்மா
தந்தை வழிக் கர்மா
முற்பிறப்புக் கர்மா..
இந்த ‘தர்ம கர்ம ‘பூமியில்
இவைதான் காரணம்
நாம் படும் துன்பத்தெற்கெல்லாம்!
ஆத்மா என்னும் உலக
மகாப் புரூடாவை..
கர்மா என்னும்
கயவாளித்தனத்தை..
நம்பும் நண்பா.. நம்பு…
ஆத்திகத்தில்
திளைத்து எழும்
அருமை நண்பா நம்பு…
வா.நேரு, 01.01.2025
குறுங்கவிதை(41)
No comments:
Post a Comment