Friday, 10 January 2025

இந்தக் கழுதை(களு)க்கு தெரியுமா ?

 


மேடையில் தந்தை பெரியார்

அமர்ந்திருக்க

பெரியாரையே விமர்சிக்கின்றார்

ஜெயகாந்தன்..

கொதித்த தொண்டர்களை

அமைதிப்படுத்துகிறார் பெரியார்....

ஜெயகாந்தனை பேசுங்கள்

எனச்சொல்கின்றார் பெரியார்…

தன்னைக் கடுமையாகப்

பேசி முடித்த ஜெயகாந்தனிடம்

அன்பொழுகப் பேசுகிறார் பெரியார்..

“அக் காலத்தில் நான் எவர்

காலிலும் விழுந்ததில்லை..

ஆனால் அப்படியே பெரியார் காலில்

விழுந்து வணங்கத் தோன்றியது

எனக்கு” என்று எழுதினார் ஜெயகாந்தன்

பண்பின் சிகரம் பெரியார் பற்றி

இந்தக் கழுதை(களு)க்கு தெரியுமா ?

                                  வா.நேரு,10.01.2025

                                  குறுங்கவிதை(46)

No comments: