நான் அறிந்தவரை
இருவகை பக்திமான்கள்..
ஒருவகை
உண்மையிலேயே கடவுள்
இருப்பதாக நம்புபவர்கள்..
அவருக்காக பயந்து நடக்க
எண்ணுபவர்கள்…
இன்னொரு வகை..
கடவுள் இல்லை என்பதை
என்னைவிட மிக
நன்றாக அறிந்தவர்கள்..
முதல்வகை மாறக்கூடும்
கடவுள் இல்லை என்பதை
ஒருநாள் உணரக்கூடும்!
இரண்டாம் வகை
எந்த நாளும் மாறாது..
கபடமாய் பக்தியாய் நடிக்கும்!
கடவுளை வைத்து கலவரம்
செய்வது எப்படி என்பதை
மட்டுமே யோசிக்கும்!
வா.நேரு,07.01.2025
குறுங்கவிதை(45)
No comments:
Post a Comment