Saturday, 25 January 2025

உண்மையை உணர்ந்த நேரம்…

 

ஒவ்வொருவர் உரையும்

ஒவ்வொரு மாதிரி…

ஒவ்வொருவர் குரலும்

ஒவ்வொரு மாதிரி…

ஒற்றைப் புள்ளியாய்

இணைக்கும் பெரியாரியல்

தத்துவத்தை…

தங்கள் தங்கள் வாழ்க்கை

நிகழ்வுகளால்…

படித்த புத்தகங்களால்…

அவரவர் பாணியில் பாடம்

நடத்தி மகிழ்ந்த நேரம்..

அற்புதமாய் மாணவ மாணவிகள்

கேட்டு உண்மையை

உணர்ந்த நேரம்…

வாழ்க! பெரியாரியல்

பயிற்சிப் பட்டறைகள் !

ஊரெங்கும் நடக்கட்டும் பட்டறை!

அழியட்டும் பழமை இருட்டறை…

                                  வா.நேரு,25.01.2025

                                  குறுங்கவிதை(53)




2 comments:

sureshsundarapandiyan said...

தங்களின் கனத்த குரலாலும் தொடர்ச்சியாக செய்திகளை அள்ளித்தரும் கருத்தான செய்திகளும் மாணவர்களை கட்டிப்போட்டதும் உண்மையாக வே உணர்வான நேரம் தான் அண்ணே...

Anonymous said...

மிக்க மகிழ்ச்சி...நன்றி சுரேசு...