Wednesday, 29 January 2025

கடவுள் கணக்கு!...

இந்தப் ‘புண்ணிய பூமியில்!’

பக்தியின் பெயரால் நீங்கள்

எதையும் செய்யலாம்…

பைக்கில் செல்லும் பெண்ணை

சாட்டையால் அடிக்கலாம்…

கஞ்சாவை அடித்துவிட்டு

பெண்ணின் கையைப்

பிடித்து இழுக்கலாம் !

சாம்பலைப் பூசிக்கொண்டு

அம்மணமாய்த் திரியலாம்!

அந்தக் கோலத்திலேயே

ஆசி வழங்கலாம் பெண்களுக்கு..

பக்தியின் பெயரால் கூடும்

கூட்டத்தில் நெரிசலில்

மிதிபட்டுச் சாகலாம் !

எதற்கும் கேள்வி கிடையாது!

எந்தக் கணக்கும் கிடையாது!

காந்தி கணக்குப் போல

இது எல்லாம் கடவுள் கணக்கு!

                                 வா.நேரு,29.01.2025

                                  குறுங்கவிதை(54)


2 comments:

ஆ.செல்லப்பாண்டியன் said...

சிறப்பு! மிகவும் சிறப்பு!வாழ்த்துக்கள்

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க அண்ணே...மகிழ்ச்சி,