குழந்தைகளுக்கு
கள்ளைக்
கொடுத்து குடிக்கச்சொல்லி
கள்ளின் பெருமை
பேசி
இருக்கிறான் ஒருவன்…
ஒட்டிய போட்டோவை
வைத்து
தமிழ் நாட்டிற்கே
பல வருடமாய்ப்
படம்
காட்டி இருக்கிறான்
இவன்…
பித்துப் பிடித்தவன்
போலக்
கையைக் காலை ஆட்டி
வெறிபிடித்தவன்
போலச்
சொற்களைக் கொட்டி..
என்ன ஆயிற்று இவனுக்கு?
சரியாகத்தான் அய்யா
ஆசிரியர்
கி.வீரமணி சொல்லியிருக்கிறார்..
‘பைத்தியங்களுக்குத்
தேவை
வைத்தியமே தவிர
விளக்கங்கள் அல்ல’
என்று
வா.நேரு,23.01.2025
No comments:
Post a Comment