Saturday, 4 January 2025

கண்ணீர்விட்டுத் தடுத்தாள்...

 வீட்டின் முன் மண்டிக்கிடந்த

துளசிச்செடியை வெட்டப்போன

கணவனைக் கண்ணீர்விட்டுத்

தடுத்தாள் அவன் மனைவி..

அய்யோ ஆபத்து வந்துவிடும்

வீட்டிற்கு ..

வேண்டாம் என

மன்றாடிப் புலம்பினாள் அவள்..

அவளது அழுகையும் அவலமும்

உண்மை என நம்பி அவள்

புலம்பிய புலம்பலும்…

இணையத்தில் சென்று பார்த்தால்

துளசி பற்றி கத்தை கத்தையாய்

கட்டுக் கதைகள் ! 

அட,ஒரு சின்ன துளசிச் செடியைச்

சுற்றி இத்தனை மூட நம்பிக்கைகளா?

                                     வா.நேரு, 05.01.2025

                                     குறுங்கவிதை(43)

No comments: