தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது..
ஆரியம் அவிழ்த்துவிட்ட
கதைகளால் அல்லாது
நமக்கான விழா பொங்கல் விழா..
நம்மவரைக் கொன்று நம்மையே
கொண்டாட வைக்கும் ‘தீபாவளி’
போல் அல்லாது இயற்கைக்கும்
விலங்குகளுக்கும் நன்றி கூறி
நாம் கொண்டாடும் ஒரே விழா!
பார்ப்பன சூழ்ச்சியில் நாம்
விழாமல் இருக்க திராவிடம்
போற்றும் தைப்பொங்கல் விழா!
உலகம் முழுவதும் இருக்கும்
தமிழரெல்லாம் சாதி மதம்
கடந்து சமத்துவமாய்
போற்றிப் பாராட்டும் விழா!
பொங்கலோ பொங்கல் என நம்
இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும்!
இனிய தமிழ்ப்புத்தாண்டு
தமிழர் திருநாள்
வாழ்த்துகள்!
வா.நேரு,13.01.2025
குறுங்கவிதை(48)
No comments:
Post a Comment