Monday, 6 January 2025

நாளை என்னவாகும்?...

அனிச்சைச் செயலாய்

கை அங்குமிங்கும் எங்கே

என்று தேடுகிறது…

ஓரிரு நாள் கையில்

மொபைல்போன் இல்லையெனில்

ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தது

போல் மனம் எண்ணுகிறது

 

நாற்பது வயதுக்குப் பின்னர்

மொபைல்போனைப் பயன்படுத்திய

நானே இந்தப் பாடுபடுகையில்

பிறந்ததில் இருந்தே

மொபைல் போனுக்குப் பழகும்

இன்றைய தலைமுறை

நாளை என்னவாகும் கையில்

மொபைல்போன் இல்லையெனில் ?...  

                      வா. நேரு, 06.01.2025

                       குறுங்கவிதை(44)


No comments: