Friday, 31 January 2025

வெற்றிச்சிரிப்பு சிரிக்கிறார்!...

 

நூறு ஆண்டுகளுக்கு

முன்னால் தொடங்கப்பட்ட

குடி அரசு இதழ்…

வைக்கம் போராட்டத்தில்

தலைமை ஏற்று

சிறையில் இருக்கும்போது

பெரியாருக்கு உதித்த எண்ணம்!

பத்திரிக்கை எல்லாம்

பார்ப்பனிய மயம்!அதை

அடித்து நொறுக்கக் கிளம்பிய

ஈரோட்டுச் சிங்கம் !

நானே எழுதுவேன்! நானே

அச்சிடுவேன்! நானே படிப்பேன்

எனத் தொடங்கிய குடியரசு இதழ்

பெற்ற வெற்றிகளால்…

அதனால்  நம் திராவிட இனம்

பெற்ற வெற்றிகளால்

வெற்றிச்சிரிப்பு சிரிக்கிறார்!

இதழாளர் பெரியார் !

                       வா.நேரு,31.01.2025

                       குறுங்கவிதை(55)

 

 

No comments: