தந்தை
பெரியாரின்
‘பெண்
ஏன் அடிமையானாள்?’
எனும்
நூல்
வேண்டும்
என்றாள்…
வாங்கிக்
கொள்…
வரிக்கு
வரி படி..
ஒரு
படி இரு படி அல்ல
தமிழ்நாட்டில்
பல
இலட்சம் படி விற்ற
நூல்
இது…
திருக்குறள்
போல்
ஒவ்வொரு
வயதில்
படிக்கும்போதும்
அந்தந்த
வயதுக்கு
ஏற்ப
அறிவினைத் தரும்
நூல் இது!
ஊன்றிப்
படி !
உணர்ந்து
படி…!
பொது
நிலையில் நின்று படி!
பொறுமையாகப்
படி !…
அவர்
காலத்தில் நின்று
அவர்
சொன்ன சொற்களின்
பொருளைக்
கண்டு படி !...
என
நூலைக் கொடுத்தேன்…
வா.நேரு,11.01.2025
குறுங்கவிதை(47)
No comments:
Post a Comment