Tuesday, 14 January 2025

தாக்கும் நாளும் இது!...

திருக்குறளின் பொருளால்

நாம் பெருமை கொள்ளும்

நாள் மட்டும் அல்ல…

திருட்டு சனாதனக் கூட்டம்

அபகரிக்கப் பார்க்கும் திருக்குறளின்

சனாதன எதிர்ப்பைச் சொல்லும்

நாளும் இது !

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’

என்ற திருவள்ளுவரை

பிறக்கும்போதே மனிதர்கள்

வேறுபடுகிறார்கள் என்னும்

வர்ணாசிரமத் திருடர்கள்

திருடப்பார்ப்பதை கருத்துகளால்

தடுக்கும் நாளும் இது!

அறிவுக்கு ஒவ்வாத

புராணக்குப்பைப் புளுகர்கள்

‘மெய்ப்பொருள் காணும் அறிவை’

தமது என்றால் …

வெகுண்டு கருத்துகளால்

தாக்கும் நாளும் இது!

இனிய திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்! 

                                       வா.நேரு

                                    குறுங்கவிதை(49)