பயணங்கள் எப்போதும்
புதிய அனுபவங்கள்
மட்டுமல்ல..
புத்துணர்ச்சியும்
புரிதலும்கூட..
நம் ஊர் பேருந்துகள்போல
படகுப் பேருந்துகள்
..
நிற்கும் படகை
உடனடியாக
கயிற்றால் கட்டி
நிறுத்த இருவர்..
பெண் நடத்துநர்கள்..
இருகரையிலும்
மாறி மாறி நிற்கும்
படகுப் பேருந்துகள்..
படகு வீடுகள்…
வகைவகையாய் மீன்
உணவுகள்…
படகையும்
பயணத்தையும் வைத்தே
முழுமையாக இயங்கும்
ஊராய்
நம் அண்டை மாநிலத்து
ஆலப்புழா..
இயற்கை அழகினால்
இதயத்திற்குள்
நுழையும் இனிய
படகுஊர்
இன்பம் பொங்கும்
நல்ஊர்…
வா.நேரு,21-01-2025
குறுங்கவிதை(50)
2 comments:
எங்களையும் பார்க்கத் தூண்டியுள்ளீர்கள் அண்ணே!
ஆமாம்..பார்க்கவேண்டிய ஊர்ங்க அண்ணே
Post a Comment