Monday, 27 January 2025

வியத்தகு மனிதர் இவர்!

 

                        

முரட்டு மீசை..

ஆனால் உள்ளமோ

முழுவதும் வெள்ளை..

எதையும் மறைக்க

நினைக்கா மாண்பு..

எடுத்த செயலை முடிக்கும்வரை

கண் துஞ்சார் இவர்..

 

கூட்டத்தின் தலைவர் எனினும்

முதல் ஆளாய்

வருவார் இணையரோடு..

எவ்வேலை எனினும் தன்

தலைமேல் போட்டுச்செய்வார்

புலவர் நா நா ஆறுமுகம்..

வியத்தகு மனிதர் இவர் ! 

 

அய்யாவின் வயது இருபதுதானோ

என எண்ணி வியந்த நேரம் பல..

இவரைப் பார்த்தால் எவர்க்கும்

உற்சாகம் தொற்றிக்கொள்ளும்!

அய்யாவின் இணையர் அம்மா

அத்தனை நிகழ்விலும் துணையாய்

தொண்டறப்பணி அனைத்திலும்

முன்னணி வீராங்கனையாய்..

 

இளையோரைத் தூக்கி

விடுவதில் ஏணி இவர் !

திறனிருக்கும் எவரையும்

புகழ்வதில் பெரும் புலவர் இவர்!

‘நட்பு வட்ட’த்தால் இலக்கியத்

தடம் பதிக்கும் முன் ஏர் இவர்!

அய்யா  நாநா-ஆவின் பிறந்த நாளில்

வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!

போற்றுகிறோம்! உங்களிடமிருந்து

பலவற்றை இன்னும் நாங்கள்

கற்றுக்கொள்கிறோம்!அய்யா நீங்கள்

வாழ்க! வாழ்க ! பல்லாண்டு வாழ்க!

                                 வா.நேரு,27.01.2025



 

1 comment:

Anonymous said...

புலவர் நாநா அய்யா வாழ்க!