Saturday, 1 February 2025

பக்தர்கள் ஏன் முயற்சி செய்தல்கூடாது?...

 

‘கும்பமேளாவில்

மிதிபட்டு செத்தவர்கள்

செத்தவர்கள் அல்ல..

நேரடியாக சொர்க்கத்திற்கு

சென்றவர்கள்’ என

ஒரு சாமியார்  நாட்டிற்கு

செய்தி சொல்லியிருக்கிறார்..

கும்பமேளா இன்னும்

முடியவில்லை..இன்னும்

நாட்கள் பல இருக்கின்றன..

கும்பமேளாவில் இருக்கும்

சாமியாரைப் படுக்கவைத்து

அவர் மேல் நடந்து  நடந்து

அவர் மேல் விழுந்து விழுந்து

அவரைச்  சொர்க்கத்திற்கு

அனுப்ப பக்தர்கள் ஏன்

முயற்சி செய்தல் கூடாது?...

                        வா.நேரு,01.02.2025

                         குறுங்கவிதை(56)