Wednesday, 19 February 2025

மரணமேளாவா?...

மகாமேளாவா?

மரணமேளாவா?

சரியான கேள்வியெழுப்பிய

மம்தாவிற்கு எதிராகப்

பொங்குகிறார்கள்..

யோகி-யின் பக்தர்கள்..

கும்பமேளாவில் குளித்த

பெண்களின் வீடியோக்கள்

அவர்கள் உடைமாற்றும்போது

எடுத்த வீடியோக்கள்

அமோக விற்பனை ஆன்லைனில்!

'தினமணி'க் கரடியே உங்கள்

முகத்தில் காறித் துப்புகிறது!

ரெயிலில் ஏற முண்டியடித்த

கூட்டத்தில் மிதிபட்டு...

கும்பமேளா நெரிசலில் சிக்கி...

எத்தனை பேர் செத்தனர்?…

அட உடைபடும்

ரெயில் ஜன்னல்கள்..

விரட்டப்படும்

ரெயில் ஓட்டுநர்கள்..

உலகமே பார்த்துச்சிரிக்கிறது

உங்கள் பக்தியின்

இலட்சணம் பார்த்து!..

இதில் மம்தாவைக்

கண்டிக்க வேண்டுமாம்!    

                          வா.நேரு,19.02.2025 

No comments: