Wednesday, 5 February 2025

சுய புளகாங்கிதம்...

திருப்பரங்குன்றம் 

கோயில் மேல் தர்கா

எனக் கச்சை கட்டுதுகள்

எச்சைகள்...

காலம் காலமாய் இருப்பதுதானே!

இதுக்கு எதுக்கு இத்தனை கூச்சல்?

சுய புளகாங்கிதம்...

கைகால்களில் விலங்கிட்டு

அமெரிக்காவிலிருந்து

திருப்பி அனுப்பப்படும்

இந்தியர்கள்...

ஒன்றிய அரசின்

பட்ஜெட்டில் 

பட்டை நாமம்

தமிழ்நாட்டுக்கு...

2 கோடிப்பேருக்கு

வேலைவாய்ப்பு

மோடி வாயால் 

சுட்ட வடை...

அகல பாதாளத்திற்குப்

போகும் ரூபாய் மதிப்பு...

விழிபிதுங்கி நிற்கும் 

நடுத்தர வர்க்கம் !

எதுக்கும் பதில்

சொல்லாத எச்சைகள்

அதுகூட நிற்கும்

வெத்து வேட்டுகள்

போடும் கூச்சல்...

உங்க பருப்பு 

தமிழ்நாட்டில் வேகாது

ராசா...வேகாது…

                                          வா.நேரு,05.02.2025

 


No comments: