Friday, 7 February 2025

காலம் காயத்தை ஆற்றட்டும்...

 

ஒருநாள் நாம் 

ஒவ்வொருவரும்

இறக்கத்தான் போகிறோம்...

ஆனால் சில

இறப்புகள் ஆறாத்துயரை

அள்ளிவைத்து 

விட்டுப் போய்விடுகின்றன...

 

எப்படி ஆறுதல் சொல்வது என

நம்மை அழுத்தத்தில்

ஆழ்த்தி அழுது 

புலம்பி தவிக்க 

வைத்துவிடுகின்றன

சில இழப்புகள்...

 

அப்படித்தான் தோழருக்கு

ஏற்பட்ட இழப்பும்...

பெற்ற பிள்ளையைப்

பறிகொடுப்பது

கொடுமையிலும் கொடுமை…

 

உனக்கு ஏற்பட்ட இழப்பில்

நானும் தவிக்கிறேன்

என்பதைத் தவிர

வேறு ஒன்றும்  செய்ய

இயலவில்லை தோழா ...

காலம் காயத்தை

ஆற்றட்டும்...

                      வா.நேரு, 07.02.2025

(தோழர் அழகுபாரதியின் மகன் கபிலன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும்)

 

No comments: