Monday, 17 February 2025

பிப்ரவரி 17...

மதகுருக்களே

மன்னர்களைவிட

அதிகாரமிக்கவர்களாய்

வலம் வந்த இருண்ட காலம்...

பூமியைச் சூரியன்

சுற்றுகிறது என மத நூல்

சொன்னதை நம்பிய

அந்தக் காலம்...

இல்லை இல்லை

சூரியனைத் தான் பூமி

சுற்றுகிறது எனச்சொன்னவர்...

பிரபஞ்ச இரகசியத்தை

அறிவியல் வழி

உலகுக்கு அறிவித்தவர்...

இந்த உலகம் கடவுளால்

படைக்கப்பட்டதல்ல என

அறிவியல்வழி ஆய்ந்து

எழுதியவர் பேசியவர்...

ஆய்ந்து அறிந்து கடவுள்

இல்லை எனச்சொன்னவர்

அறிவியல் அறிஞர்

ஜியார்டானோ புரூனோ

மதவாதிகள் கட்டளையால்

கொடூரமாய்க் கொல்லப்பட்ட

நாள் இன்று பிப்ரவரி 17...

                          வா.நேரு,17.02.2025

 

 

 

 

 

No comments: