Sunday, 9 February 2025

நீயும் நானும் உணர்வோமா?

 

கூடி வாழ்தல்

ஒரு கலை...

மனிதர்களைவிட

சிற்றுயிர்கள்தான்

கூடிவாழ்தலுக்கு

முன்னெத்தி ஏர்கள்..

எறும்பும் தேனியும்

ஏன் கரையானும் கூட

பொறுப்புணர்வோடு

இணைந்து வாழ்தலுக்கு

எடுத்துக்காட்டாய்

இப்புவியில்...

நீயும் நானும் உணர்வோமா?

வீண் சண்டையிட்டு மடிவோமா?

                               வா.நேரு,09.02.2025

No comments: