Tuesday, 4 February 2025

அக்கு அக்காய் ...

 

ஓவியக் கூடம்…

அதனதன் இடத்தில்

வரையப்பட்ட ஓவியங்கள்

வைக்கப்பட்டிருந்தால்

ஓவியக் கூடம்

அழகாக இருக்கக்கூடும்..

ஆனால் தாறுமாறாய்ப் படங்கள்

கூடத்திற்குள் கிடப்பது போல

நம் மனம் இருக்கிறது…

நம் மனதிற்குள் ஓடும்

பல எண்ணங்கள்…

நம் மனதிற்குள் கிடக்கும்

எங்கெங்கோ பார்த்த காட்சிகள்…

அக்கு அக்காய் எவ்விதத்

தொடர்பும் இன்றி ஒழுங்கும் இன்றி

மனதிற்குள் தனித்தனியாய்க்

துண்டு துண்டாய்க் கிடக்கிறது…

அதை ஒழுங்குபடுத்த

முயல்வதுதான் வாழ்க்கையோ?...

அதை முயன்று முடியாமல்

போவதுதான் மனக்குழப்பமோ?

                          வா.நேரு,04.02.2025

             நன்றி: உலக சரித்திரம் –ஜவஹர்லால் நேரு,

             தமிழில் ஒ.வி.அளகேசன்

No comments: