என் கவிதைகளை
நிறையப் படித்திருக்கும்
என் தோழர் ஒருவர்
என் மகனின் கவிதையைப்
படித்துவிட்டுப் பாராட்டினார்…
உங்கள் கவிதையைவிட
கவித்துவத்தில் உங்கள்
மகன் கவிதை நன்றாக
இருக்கிறது என உளமாறப்
பாராட்டி மகிழ்ந்தார்…
இன்னொரு நண்பர் அவனது
கவிதையை வாட்சப்
ஸ்டேட்டசில் வைத்திருந்தார்…
'தம்மின் தம் மக்கள்...'
பெருமைதான் பெற்றோராகிய
எங்களுக்கு….
வா.நேரு
, 06.02.2025
…
No comments:
Post a Comment