Thursday, 20 February 2025

மாட்டிவிடாமல் மீட்டதற்காக...

 

மூளைக்குள்

அப்பிக்கிடக்கும்

அழுக்கை அகற்றுவது

அவ்வளவு ஒன்றும் எளிதல்ல...

ஆபத்தான மலக்கழிவு

நுண்ணுயிர்கள் மண்டிக்கிடக்கும்

கும்பமேளா ஆற்றில்

குளிப்பதற்குப் போட்டியிடும்

மனிதர்களுக்கு உண்மையை

உணர்த்துவது அவ்வளவு சுலபமல்ல..

நாட்டை ஆள்பவர் முதல்

நாடோடிகள் வரை

இந்த மலக்குப்பைக் குட்டையில்

மூழ்கி எழுந்தால்

மோட்சம் என நம்புவதை

முறிப்பது அவ்வளவு எளிதல்ல..

பகுத்தறிவுக் கண்ணாடி அளித்த

தந்தை பெரியாரை நினைத்திடுவோம்

இந்தக் குப்பைகளுக்குள் நாம்

மாட்டிவிடாமல் மீட்டதற்காக...

                               வா.நேரு,20.02.2025

No comments: