Friday, 21 February 2025

கரும்பு தந்த தீஞ்சாறாய்...

நம் தாய் நமக்கு

தொட்டிலில் இட்டு

தாலாட்டிய மொழி..

அடிபடும்போதும் நாம்

அடிக்கும்போதும் நம்மை

அறியாமல் நம்

வாயிலிருந்து வந்து

விழும் மொழி…

நம் எண்ணத்தில்

எப்போதும் ஓடும் மொழி..

‘கரும்பு தந்த தீஞ்சாறாய்’

எப்போதும் இனிக்கும்

எம் மொழி தமிழாம்!

இனிய தாய்மொழி

நாள் வாழ்த்துகள் !

                        வா.நேரு,21.02.2025


No comments: