Monday, 3 February 2025

பகையாகக் கருதுகிறது…..

 

ஆரிய மாயை ‘எழுதி

சிறைக்குச் சென்றவர்…

அவாளின்  நரித்தனங்களை

எழுத்துகளால் விளக்கியவர்

சூத்திரன் சத்திரியனாக மாற…

பார்ப்பானுக்கு கொட்டி அழுத

செல்வத்தை ‘சிவாஜி கண்ட

இந்து ராஜ்யத்தில்’ எவருக்கும்

விளங்கும் வண்ணம் எழுதியவர்

சிவாஜி என்னும் பெயரைக்

கணேசனுக்குப் பெரியார்

சூட்டக் காரணமாக இருந்தவர்…

அண்ணா எழுதியவை பேசியவை

அனைத்தும் அவாள்களின்

கோட்டையைத் தகர்க்கும்

அறிவுக்குண்டுகள் என்பதால்தான்

இன்றும் பார்ப்பனியம் பெரியாரோடு

பேரறிஞர் அண்ணாவையும்

பகையாகக் கருதுகிறது…..

அண்ணா மறைந்தார்! அண்ணா வாழ்க!

                                   வா.நேரு,03.02.2025

  

 

 

 

படி நடிக்கவைத்தவர்

No comments: