Thursday, 18 July 2019

பாம்புக் கிணற்றின் நினைவுகள்..


கடந்து போன காலங்கள் (18)


விலைக்குத் தண்ணீரை
குடிக்கவும் குளிக்கவும்
வாங்கும்  நிலையில்தான்
கொட்டும் மழை நீரைச்
சேகரிக்கும் எண்ணம் வலுக்கிறது மனதில்...

சின்ன ஊர் அது......
மழை நீர் சேகரிப்பாய்
சில ஊர் நல விரும்பிகள் உழைப்பால்
ஊருக்குள் பெய்யும் மழையை
ஒருங்கிணைத்து
ஒரு கிணற்றுக்குள் விடும்செயலை
கட்செவியில்
பகிர்ந்திருந்தான் தம்பி.....

சின்ன சின்ன ஊருணிகள்
எல்லாம் மழை நீர் சேகரிப்பு நிலையங்கள்தான்..
ஊருக்குள் இருந்த கிணறுகள்
எல்லாம் நிலத்தடி நீரை உயர்த்தும்
அறிவியல் கூடங்கள்தான் ....
எனது கிராமத்தில்
நான் சிறுவனாக இருந்த காலத்தில்
தெருவுக்கு ஒரு கிணறு இருந்த நாளும்
அதன் தொடர்பான செய்திகளும்
நினைவுக்கு வர
கட்ச்செவியில் பதிவுகள் போட்டேன்....

எங்கள் தெருவில் இருந்த கிணற்றுக்கு
பெயர் பாம்புக்கிணறு.....
தெருவின் நுழைவு வாயிலில்
வெளியில் சென்று திரும்பும் நேரமெல்லாம்
வரவேற்கும் பாம்புக்கிணறு

சிறுவயதில் கேப்பக்களி தாத்தா
கமலையில் தண்ணீர் இறைத்து
அவர் தோட்டத்திற்கு பாய்ச்சியதைப் பார்த்திருக்கிறேன்....

எனது உடன் பிறப்பும்
அவரோடு படித்த இன்றைய வி.ஐ.பியும்
தண்ணீர்ப் பாம்பை பிடித்துப்போய்
வகுப்பில் விட்டு
செமையாய் வாத்தியாரிடம்
அடிவாங்கியதற்கு
அடித்தளமாய் பாம்பைக் கொடுத்தது இக்கிணறுதான்

கிணறு நிறையத் தண்ணீர்
இருந்த காலமும்
பெயருக்கு ஏற்ப சில பாம்புகள்
கிணற்றுக்குள் இருந்த நினைவும்
குளித்த நினைவும்
வாளியில் தண்ணீர் இறைத்த நினைவும்
என நினைவுகளால் நிறைகிறது
பாம்புக் கிணற்றின் நினைவுகள்......

பகிரக்கூடியதாய் சில
பகிர முடியாததாய் சில
அதன் நினைப்பே சிரிப்பும்
மகிழ்ச்சியுமாய் விரிகிறது மழைத்துளியாய்....

இப்போது வெறும் குப்பைக் கிடங்காக
இருக்கிறது கிணறு என்றான் தம்பி....
கிணறு எப்படி குப்பைக் கிடங்காக மாறும்?
கிணற்றுக்குள் தண்ணீர் இல்லை...
மக்கள் குப்பைக் கிடங்காக
மாற்றி விட்டார்கள் ...இப்போது அது
குப்பை நாறும் குழியாகக் கிடக்கிறது என்றான்....

நிலத்தடி மொத்தமாக குறைந்து விட்டது ஊரில்...
மழை பெய்தால் இக்கிணற்றுக்குள்
மழைத்தண்ணீர் செல்ல வழி செயல் வேண்டும்...
குப்பைகளை மொத்தமாக அள்ளி
வெளியில் போட்டு
மீண்டும் கிணறாய் அது ஊற்றெடுக்க வேண்டும்.....
ஆர்வமாகச் சொன்னான் தம்பி...

ஆம்! ஆம்!
குப்பைக் கிடங்குகளாய் மாறிவிட்ட
ஊர்க் கிணறுகள் எல்லாம்
மழை நீர் சேகரிப்பு கிணறுகள்
ஆகிட வேண்டும்....
மீண்டும் ஒரு நாள்
ஊற்றெடுக்கும் கிணறுகளாய் மாறிடல் வேண்டும்...

                          வா.நேரு ,
                          18.07.2019


Wednesday, 10 July 2019

கிரிக்கெட்டில்(மட்டய்யடி) தோற்றால் குடி முழுகிப்போய் விட்டதா? ......


மட்டய்யடி...(தெலுங்குத் தரவு:கோவர்த்தனீயல,919701381799);தமிழில்:திருவூர்கோரா;கட்செவியிலிருந்து)ஒவ்வொரு அம்சத்துக்கும் ஒவ்வொரு காய்கறி+கனியய்முத்தாய்ப்பாய்ப் போட்டு 'தூள்' பறத்தியிருக்கிறார் பாராட்டுக்குரிய கோவர்த்தனீயல அவர்கள்!


மட்டய்யடி ஆட்டத்தில் விக்கெட் விழுந்தால் நாடே  தலய்குப்புற விழுந்துவிட்டது போல் துடிதுடிக்கும் தேச பக்தி சிகாமணிகளே!கீழே தரப்பட்டுள்ள விடயங்கள் குறித்து எப்போதாவது கிஞ்சித்தேனும் கவலய்ப்பட்டதுண்டா?ஒரே ஒரு முறய்யாவது சிந்தித்துச்சொல்லுங்கள்!@நாட்டுக்கே சோறு போடும்,உயிரற்ற உடல்களாகவீழ்ந்துபடும் விவசாயிகளய்ஒரு கணமேனும் நினய்த்துப் பார்ப்பதுண்டா?விருப்பமான மட்டய்மடி வீரர்/சோம்பேறி 100 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்ளும் நீங்கள், உங்களுக்குத் தெரிந்த வேளாண்மய்க்காரர் ஆறாவது,நூறு மூட்டய் நெல் விமர்சிக்க வேண்டுமென (இல்லவே இல்லாத) கடவுளிடம் மனமுருகி முறய்யிட்டதுண்டா?

இரண்டு மணி நேரத்துக்கு கய்யிலும் கக்கத்திலும் மட்டயய் இருக்கிக் கொண்டு ஆடியவர் கடவுள் என்றால்,உங்களுக்காக வாழ்நாள் முழுவதும் உண்ண சோறு விளய்வித்துத் தரும் விவசாயிக்கு தாங்கள் அளிக்கும் பெயர்தான் என்ன?நாடு வெல்வதற்கு இன்னும் சில பந்து வீச்சங்களே பாக்கி எனும் போது, வறண்டு போகும் தொண்டய்யய்நீவிவிட்டுக் கொள்ளும் நீவிர்,நாட்டய்வாழ வய்க்கும் நதி/ஆறுகளில்  நீரோட்டம் குறய்ந்தளவே  எஞ்சி/விஞ்சியுள்ளனவே என்ற கவலய்/ஆற்றாமய் எப்போதாவது இருந்ததுண்டா தங்களுக்கு!?

தங்களுக்கு விருப்பமான மட்டய்யடி வீரர்களய் தங்களுக்கு விருப்பமான வழிகளில் ஊக்கப்படூத்துவீர்கள்;ஆனால்,தங்களய் உயிரோடும் உணர்வோடும் வய்க்கும் வேளாண் குடி மக்களய்எப்போதாவது ஊக்கப்படுத்தியதுண்டா?இல்லய் என்ற எட்டிக்காய் கசப்பான உண்மய்யாவது தெரியுமா?தங்களுக்கு எந்த ஊரில் எந்த ஆட்டங்களம் எப்படியிருக்கும்?/எப்படிப்பட்டது என்பது பிழய்யறத் தெரியும்?அதே நேரத்தில்,தங்களுடய்ய ஊரிலேயே சந்தய் நிலவரம் என்னவென்று தெரியுமா?சந்தய் எங்கிருக்கிறது என்பதற்காகவும் அறிவீர்களா?சோறுண்ணும் போது கூட, பாக்கிஸ்தான் குழுவய் உள்ளே எந்த அளவுக்கு நுழய்யவிட வேண்டுமென்பதய் மிகச் சரியாக (கனகச்சிதமாக) அறிவீர்கள்!;ஆனால், உன் கரங்களில் தவழ்வதுதங்கள் நாட்டில் விளய்ந்த அரிசியா அல்லது வெளிநாட்டு உற்பத்தியா? என்பது தெரியுமா?புரியுமா?.

2.இந்திய மட்டய்யடி வாரியம் அல்லது குழுவினர் விடும் பிழய்களய்+செய்தவர்களும் எப்போது வேண்டுமானாலும் பரிசீலிக்க/நார் நாராய்க் கிழித்துத் தொங்கவிடத்தெரிந்த தங்களுக்கு, வேளாண்மய்க்கெனவே பெயர் பெற்ற இந்த நாட்டில்,'மாடு கட்டிப் போரடித்தால்மாளாதுசெந்நெல் என்று ஆனய் கட்டிப் போரடித்த தென் மதுரய் கூடிய இந்நாட்டில்,அரசினர் விடும் பிழய்களய்/பணிகளய் எண்ணிப் பார்க்க‌...நேரமுண்டா?//ஆரு,எப்போது,எப்படி,எங்கே,என்னென்ன சாதித்தார்கள்என கணித்து வய்த்திருக்கும் தங்களுக்கு, நாளாந்தம், எங்கெங்கே, எத்துணய் வேளாண் குடிமக்கள் சாகுபடிப் பணிகளில் வலிந்து/உழன்று கொண்டிருக்கிறார்கள் எனத் துல்லியமாக வேண்டாம்?மேம்போக்காகவாவதுதெரியுமா?//உண்மய்யான - அச்சு&அசலான ஓட்டம் எது என்பதய் அறிவீர்களா?;எப்போதாவது,ஆதரவு நிலம் கிடய்ப்பதற்காக+மின் வழங்கலய்உறுதிப்படுத்துவதற்காகப் போராடி,லதீதியடி வாங்கியும் வயல்களில் உழன்று கொண்டிருக்கும் விவசாயியய்த் தாங்கள் அறிவீர்களா?//எந்த நாட்டுப் பந்து வீச்சாளர் எப்படிப் பந்து வீசுவார் என்பது மட்டுந்தான் தெரியும் தங்களுக்கு;அரசும்+தரகர்களும் வேளாண்குடிகளய் மோசவலய்களில் வீழ்த்திச் சாய்க்கின்றார்களோ  என்பது குறித்து எப்போதாவது ஆலோசித்ததுண்டா?//பிள்ளய்களய் விளய்யாட்டு அரங்குகளுக்கு இட்டுச் சென்று விளக்குவது மட்டும் போதவே போதாது; வயல் வெளிகளில், ஏர் உழுவதும்+நாற்று படுவதும்,களய்பறிப்பதும்,நெல் அறுப்பதும், கதிரடிப்பதும்,நெல் நூற்றுக்கும் - என பயிர் சாகுபடிப்பணிகள் எல்லாம் நடய்பெறுவது எப்படி? - எனப் படிப்பித்துத் தர வேண்டும்!
.
3.பிள்ளய்கள் அருந்தும் பால்+தயிர்+மோர்+வெண்ணெய் +நெய் ஆகியவய் வரும் வழிமுறய்கள் என்னென்ன என்பனவற்றய்யும் நன்கறியத் தரவேண்டும்;//மட்டய்யடி ஆடுவோம் பூட்டு+குளிர் பானங்களய்ப் பருகி நல்ல. உடற்க்கட்டுடன் திகழ்கிறார்களோ, அது போலவே தாங்களும் தங்கள் பிள்ளய்ச் செல்வங்களும் உண்ணச் சோறின்றி, உலா வர ஏலுமா?

4.தொலய்க்காட்சிப். பெட்டிகளய் விட்டுப் பிரித்தெடுக்க இயலாமல் பசய்போல ஒட்டிக் கொண்டும், வானொலி நேரடி வர்ணனய்களய்க் கேட்டுக் கொண்டும் காலத்தய் வீணடிக்கும் தாங்கள்,வேளாண் சார்ந்த ஒலி+ஒளி பரப்புகளய் ஏறெடுத்தும் பார்த்ததுண்டா?எப்போது எவ்வாறு ஆடினால் நாடு வெல்லும்/தோற்கும் என்பதய் உணர்ந்ததாங்கள்/சொல்லக்கூடிய தாங்கள்,இந்த நாடு உணவு தானிய வகய்களில் - சாகுபடி விடய்யங்களில் பெரு வெற்றிதனய்ஈட்ட இயலும் என்று பகுத்துச் சொல்ல இயலுமா?பத்து பேர் (உண்மய்யில் 25 பேர்)ஆடும் ஆட்டத்துக்கு இலக்கக்கணக்காணோர் ஒன்று திரண்டு நிற்கிறோம்; ஆனால்,அதே நேரத்தில்,கோடிக் கணக்கான மக்களின் அழிபசிதீர்க்கும் விடயத்தில் மட்டும்,நாம் செய்வதுதான் என்ன!?இந்தியாவய் மட்டய்யடி போட்டிகளில் வெல்ல வய்ப்பதில் மட்டுமல்லாமல்,கோடிக் கணக்கான மக்களய்ப் வாழவய்க்கும் வேளாண்மக்கள் குறித்தும் சிந்திப்போமாக!//இந்தியா வெல்ல வேண்டியது ஆட்ட அரங்குகளில் மட்டுமல்ல;பச்சய்ப் பசேலென மின்னும் வயல்வெளிகளில்தான் முதன்மய்யாக!அதற்கென விவசாயிகள்,'அவுட்' ஆகாமல் களத்தில் நிற்க வேண்டும்;நாம் அனய்வரும் அங்கே ஊக்க ஆற்றல்கள் (cheer leaders) ஆக மாறியது வேண்டும்!
 கோரா &கோராவின் அன்பு துணய்வி  வே. ஹேம மாலினி