Tuesday 16 August 2011

ஊடகத்துறை

ஊடகத்துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்போம்!
மதுரையில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை தொடக்க விழாவில் சூளுரை

மதுரை, மார்ச் 5_ தந்தை பெரியாரின் பகுத்-தறிவு, சமூக நீதிக் கருத்து-களை ஊடகங்களின் வாயிலாக பரப்புவதற்-காகத் தொடங்கப்பட்ட பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை அமைப்பை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உருவாக்க வேண்டும் என்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கட்டளை-யிட்டிருந்தார். அதன்படி மதுரையில் பெரியார் சுயமரியாதை ஊடகத்-துறையின் தொடக்க-விழாவும், கருத்தரங்கமும் பிப்ரவரி 7-ஆம் தேதி-யன்று மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்-தால் ஏற்பாடு செய்யப்-பட்டிருந்தது. மதுரை மூட்டா அரங்கில் நடை-பெற்ற இவ்விழாவிற்கு வருகை தந்திருந்தவர்-களை மாவட்ட ப.க. செயலாளர் பா.சட-கோபன் வரவேற்று உரை-யாற்றினார்.

குறும்படம் திரையிடல்

ஊடகத்துறையின் அவசியம் குறித்தும், சென்னையில் நடை-பெற்ற பெரியார் திரை குறும்படப்போட்டி உருவாக்கிய தாக்கம் குறித்தும் மாநில பகுத்தறி-வாளர் கழகத் தலைவர் வா.நேரு தனது தலைமை-யுரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து நீதிய-ரசர்(ஓய்வு) பொ.நடராசன் மற்றும் மாநில திராவி-டர் கழக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் கி.மகேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். பிறகு, 2002-இல் குஜராத் இந்துத்துவாவினரால் நடத்தப்பெற்ற இனப்-படுகொலை தொடர்-பாக, ச.பிரின்சு என்னா-ரெசு பெரியார் இயக்கிய திற குறும்படம் திரை-யிடப்பட்டது. அரங்கம் நிறைந்திருந்த நிலையி-லும், சலனம் ஏற்படாத அளவு, படம் பார்வை-யாளர்களிடம் தாக்-கத்தை ஏற்படுத்தியி-ருந்தது. பார்ப்பனர்களின் திட்டமிட்ட செயல்

திரையிடலின் நிறை-வில் படம் தொடர்பான விவாதமும் விளக்கமும் சிறிது நேரம் இடம்-பெற்றது. பெரியார் சுய-மரியாதை ஊடகத்துறை அமைப்பாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஊடகங்களும் பார்ப்பனி-யமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். பத்திரிகை, தொலைக்-காட்சி, திரைப்படம் மற்றும் இணைய ஊட-கங்களில் பார்ப்பனர்-களின் திட்டமிட்ட செயல்பாடுகள் எவ்-வாறு இருக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் விளக்-கினார். மேலும் தனது உரையில், ஊடகங்களில் என்ன செய்தி வெளிவர-வேண்டும் என முடிவு செய்யும் இடத்தில் உயர்-ஜாதியினரும் குறிப்பாக பார்ப்பனர்களுமே ஆதிக்கம் பெற்றுள்ளனர் என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. நம்மவர்களின் பல்லவியோ!

மக்களின் பொதுப்புத்-தி-யில் உலவ வேண்டிய கருத்தாக்கங்களை பார்ப்-பனர்கள் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். அதை உண்மையென்றும், நடுநிலையானதென்றும் நம்பி தங்களின் கருத்தாக பார்ப்பனரல்லாத மக்களும் ஏற்கின்றனர். இதனால் தான் இட-ஒதுக்கீடு, ஈழத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்திலும் பார்ப்-பனர்களின் கருத்துக்கு ஒப்ப படித்த பாமரர்-களான நம்மவர்களும் கருத்து கொண்டிருக்-கிறார்கள். தகுதிக்குதான் சார் மதிப்பு கொடுக்-கணும் என்று பார்ப்ப-னர்களின் பல்லவியை நம்மவர்களும் பாடுகி-றார்கள்.

திரைப்படத்துறை-யிலும் முற்போக்கு, சமூகப்பார்வை என்ற பார்வையில் பாலச்சந்தர், மணிரத்னம், சுஜாதா உள்ளிட்ட பார்ப்பனர்-களும், ஷங்கர் போன்ற கன்வர்ட்டட் பார்ப்ப-னர்களும் தூவியிருக்கும் விஷ விதைகள் தமிழர்-களை படுகுழியில் தள்ளியிருக்கிறது. எனவே பொது ஊடகத்துறையில் பெருமளவில் பங்கேற்க, பணியாற்ற நம் இளை-ஞர்களை உருவாக்கும் பணியைத்தான் தமிழர் தலைவர் அவர்கள் உருவாக்கிய பெரியார் சுயமரியாதை ஊடகத்-துறை செய்துவருகிறது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு ஊடகத்-துறையில் இருக்கும் பார்ப்பனிய ஆதிக்-கத்தைத் தகர்க்க முன்வர-வேண்டும் என்று தமி-ழின இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்து உரையாற்றினார். வாழ்க்கை இணைஏற்பு

பின்னர் பெரியார் திடலில் பணியாற்றும் சிவகங்கை மாவட்டம் கோவனூரைச் சேர்ந்த கண்ணன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த லெட்-சுமி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. மாநில ப.க. தலைவர் வா.நேரு, மதுரை மாவட்ட திராவிடர் கழக ஒருங்-கிணைப்பாளர் வே. செல்வம் ஆகியோர் முன்னிலையில் மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் கி.மகேந்-திரன் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை ஏற்கச்-செய்து இணையேற்பை நடத்திவைத்தார். சுயமரியாதைத் திருமண முறையில் வாழ்க்கை இணையேற்பு நடப்பதன் வரலாற்றுப் பின்ன-ணியையும் வாழ்வியல் சிறப்பையும் எடுத்துக் கூறி, பெரியார் கொள்-கைப்படி தமிழர் தலை-வர் இளைஞர்களுக்கு விடுத்த கட்டளைகளில் ஒன்றான மணவிலக்குப் பெற்ற மகளிரைத் திரு-மணம் செய்தல் என்ற அடிப்படையில் இணை-யேற்றிருக்கும் மண-மக்களை வாழ்த்தி உரையாற்றினார். விழாவில் தி.க. மாவட்டத் தலைவர் க. அழகர், மாவட்டச் செய-லாளர் திருப்பதி, மாவட்ட துணைத்-தலை-வர் அ. வேல்-முருகன், பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி மற்றும் எண்ணற்ற இயக்கத் தோழர்களும், இயக்கம் சாராத புதுமுகங்களும் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி செயலா-ளர் விடுதலை ராசா நன்றி கூறினார். தொடர்ந்து மதுரையில் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் திரையிடல்களை நடத்து-வது என முடிவு செய்-யப்பட்டுள்ளது.

No comments: