Monday 22 May 2017

இந்த நாளில்தான்

தனது உழைப்பை
எனது தாயார்
நிறுத்திக்கொண்ட
நாளிது..........

ஐந்து குழந்தைகளை
வளர்ப்பதற்காக
அல்லும் பகலும்
உழைத்த
உழைப்பின் உருவம்
நிரந்தரமாய்
ஓய்வு எடுத்துக்கொண்ட
நாளிது.........

காட்டில் களை
எடுக்கும் பெண்ணாய்
மாட்டிற்க்காக
புல் சுமக்கும் சுமையாய்
பள்ளியில் கற்பிக்கும்
ஆசிரியராய்
அதிகாலை 3 முதல்
இரவு வரை அம்மம்மா......
எத்தனை பணிகள்
அத்தனையும்
எங்களை உயர்த்துவதற்காய்.....

உனது உழைப்பால்
எங்களை வசதியாய்
உட்காரவைத்தாய்....
ஒரு நாளும் நீ
உட்கார்ந்ததில்லை..
வசதிகள் வந்தபின்னும்
வாய்ப்பு என
அமர்ந்ததில்லை.....
உழைத்தாய்..உழைத்தாய்
நிரந்தர ஓய்வுவரை
பம்பரமாய் உழைத்தாய்

உறவுகளே
எதிரிகள் ஆனபோதும்
அவர்களைத்
தன் உழைப்பால்தான்
எதிர்கொண்டாய்....
வெற்றிபெற்றாய்....

உழைப்பொன்றே
உயர்வு தரும்.....
எம் பிள்ளைகளுக்கு
நாங்கள் சொல்ல
பாடமானாய் அம்மா.....
இந்த நாளில்தான்
படமானாய் எங்களுக்கு.....

                                        வா.நேரு,23.05.2017








3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்

சென்னை பித்தன் said...

தாய்மைக்கு அஞ்சலி.
ஆண்டுகள் பல கடந்தாலும் தாயின் இழப்பு வலி தருவதே.

முனைவர். வா.நேரு said...

ஆமாம் அய்யா, நினைக்கும் நேரம் எல்லாம் வலி தரும் இழப்பே....... நன்றி,கருத்திற்கு