ஆசிரியர் அய்யா கி.வீரமணியும் நீட் போராட்டங்களும் என்னும் தலைப்பில் நான் பேசிய உரை,.யூ டியூப் இணைப்பு கீழே இருக்கிறது.
Tamil Nano Research Chair 28 ' அய்யா கி.வீரமணி அவர்களின் சமூகப்பணிகள் ' தமிழ் நுண் தமிழாய்விருக்கை என்ற இருக்கையில் நிகழ்த்தப்பட்ட உரை .இது ஒரு மெய்நிகர் தமிழாய்வுரை.இந்த இருக்கையை உருவாக்கியவர்கள் பெரியார் பன்னாட்டு அமைப்பு,அமெரிக்காவின் இயக்குநர் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களும் அவரது இணையர் அம்மா மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்களும் .இந்த நிகழ்வு மட்டுமல்ல,இதைப்போன்ற பல இருக்கைகள் சார்பாக மெய்நிகர் தமிழாய்வுரைகள் நடைபெறுகின்றன.மருத்துவ இணையர்கள் இந்த இருக்கை மட்டுமல்லாது, தந்தை பெரியார் இருக்கை,அறிஞர் அண்ணா இருக்கை என்பதையும் உருவாக்கி இருக்கிறார்கள்.
மறைந்த அறிவியல் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா அவர்க்ளின் மகனார் திருமிகு மருத்துவர் முனைவர் செம்மல் அவர்கள் ஒரு ரூபாய் தமிழ் மன்றம் என்னும் அமைப்பினை ஏற்படுத்தி ,தமிழுக்கான மிக அருமையான பணிகளை,இணையம் வழியாகச் செய்து வருகிறார். நன்றியோடு தமிழர்கள் எல்லாம் பாராட்டவேண்டிய பணி. பாராட்டி மகிழ்கின்றோம்.
குற்றாலம் பராசக்தி கல்லூரியின் மேனாள் முதல்வர் ,பேரா முனைவர் பா.வேலம்மாள் அவர்கள் ,இந்த மெயநிகர் உரைகளை எல்லாம் ஒருங்கிணைக்கிறார்கள்.இப்போதுதான் பணியில் இணைந்த ஒரு பேராசிரியர் போல அவர்கள் சிறப்பு உரையாளர்களை அறிமுகப்படுத்துவதும்,உரையை குறிப்பெடுத்து உரை முடிந்தவுடன் அதனைப் பற்றி தனது கருத்தினைக் கூறுவதும் அருமை.ஓய்வு பெற்று பணி ஓய்வில் இருக்கும் பலரும் தங்கள் வாழ்க்கையை எப்படி உற்சாகமாக அமைத்துக்கொள்ளலாம் என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு அம்மா வேலம்மாள் அவர்கள்.பின்னோட்டத்திற்கு கலந்து கொண்டவர்களை அழைப்பது ,கருத்து கூறுவது என நிகழ்வையே உயிரோட்டமாக ஆக்கி விடுகிறார்கள்.
செல்வி குணப்பிரியா அவர்கள் பின்னணியில் இருந்து நிகழ்வு நடக்க இணையத் தொழில் நுட்பத்தைக் கவனித்துக்கொள்கிறார்கள்.
சென்ற 27.09.2026 அன்று இரவு 8.30 மணிக்கு ஆற்றிய உரை. வாய்ப்பு இருக்கும்போது கேட்டுப்பாருங்கள். கேட்பவர்கள் தங்கள் கருத்துகளை பின்னோட்டத்தில் இடுங்கள். நன்றி
https://youtu.be/blI6Uol_sWw?is=KXzBKkO-W-IYKb4-

No comments:
Post a Comment