இனிவரும் உலகத்தைப் பற்றிச் சிந்தித்த பெரியார் ‘போக்குவரவு –எங்கும் ஆகாய விமானமும் ,அதிவேக சாதனமுமாகவே இருக்கும்’ என்றார் 80 ஆண்டுகளுக்கு முன். அதிவேக சாதனங்களால் நிறைந்திருக்கும் உலகமாக இன்றைய உலகம் மாறி இருக்கிறது.எலான் மாஸ்க் தனது ‘டெஸ்லா’ நிறுவனத்தின் சார்பாகத் தயாரிக்கப்பட இருக்கும் பறக்கும் கார் 2028-ல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறார். பறக்கும் கார் எப்படி பறக்கும் என்பதற்கான செயல் விளக்கத்தை 16.10.2026 அன்று நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
விமானம் ஓடுதளத்தில் ஓடுவதுபோல,வளைந்த பெரிய பாலத்தின் மீது செங்குத்தாக ஏறி கொஞ்ச தூரம் ஓடி பின்பு பறக்கும் கார் தலை கீழாக வந்தது..பாலத்திலிருந்து காற்று வெளியில் வந்த ,கார் அப்படியே அந்தரத்தில் சுழன்று மீண்டும் தரைக்கு வந்து மிக வேகமாக ஓடியது. நேரலையாக இந்த நிகழ்வை ஒளிபரப்பினார்கள்..பார்க்க வியப்பாக இருந்தது. இன்னும் 20 ,30 வருடங்களில் பறக்கும் கார்கள் இயல்பாக ஆகலாம்.பறக்கும் கார்கள் எப்படி இயங்கும்,அதற்கான எரிபொருளாகக் காற்று எப்படி இருக்கும் என்றெல்லாம் செய்திகள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இணையதளங்களில் பறக்கும் கார்கள் பற்றிய செய்திகள் நிறைய உள்ளன.
விமானப் போக்குவரத்து மிக அதிக அளவில் அதிகரித்திருக்கிறது.தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப்போலப் போக்குவரத்து ஆகாய விமானப் போக்குவரத்தாக மாறியிருக்கிறது. தற்போதெல்லாம் இயல்பாக மத்திய தர வர்க்கத்தைச் சார்ந்த பலர் விமானப் பயணத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர்.சென்னையி
அண்மையில் இண்டிகோ விமான நிறுவனம் தனது பயணிகளின் டிக்கெட் விலையை அதிகரித்திருக்கிறது.அதற்கு அவர்கள் சொன்ன முக்கியமான காரணம் விமான எரிபொருள்களின் விலை ஏற்றம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.விமா
பிபிசி நிறுவனம், விமானத்தில் பயன்படுத்தக்கூடிய சிறப்பு வகைப் பெட்ரோலியப் பொருட்கள் பற்றியும் ,அதற்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலைமைகள் பற்றியும் ,ஈரான் அமெரிக்கா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போர், எப்படி விமான எரிபொருட்கள் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைப் பற்றியும் விரிவான செய்தியினைக் கொடுத்துள்ளது.
இறந்து போன சடலங்கள், மக்கிய தாவரங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கையான பெட்ரோலியப் பொருட்களாக மாறுவதையும்,அதனை சுத்திகரித்து எடுப்பதில் இருக்கும் பிரச்சனைகளையும் அந்தச் செய்தி அலசுகிறது. நைஜீரியா நாடு,விமான எரிபொருளுக்கான கச்சாப் பொருட்களைப் பெருமளவில் அந்த நாட்டில் பெற்றிருந்தாலும், அதனைச் சுத்தபடுத்தி விமான எரிபொருளாக மாற்றுவதற்கான தொழில்நுட்பமும்,கருவியும் இல்லாத காரணத்தால் மற்ற நாடுகளையே விமான எரிபொருளுக்கு அந்த நாடு நம்பி இருக்கிறது என்னும் உண்மையை வெளியிட்டு இருக்கிறது.கையில் வெண்ணெய் வைத்திருந்தாலும் அதனை நெய்யாக மாற்றுவது எப்படி என்பது தெரியாமல் நைஜீரியா திணறுகிறது. ஆனால் எது எப்படி இருந்தாலும் விமானப் போக்குவரத்து என்பது எல்லா நாடுகளிலும் அதிகரித்திருக்கிறது. பயணத்தை எளிதாக மாற்றியிருக்கிறது.
ஏறத்தாழ 123 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் விமான வடிவத்தில் மனிதர்கள் பறக்கலாம் என்று கண்டுபிடித்த ரைட் சகோதர்கள் வில்பர் ரைட்& ஆலிவர் ரைட் ,உலகம் இப்படி எல்லாம் ஆகாய விமானத்தால் மாறும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.
ரைட் சகோதர்களுக்கு முன்பே பலர் விமானத்தை வடிவமைக்க முயன்று இருக்கிறார்கள்.ஜெர்மனியைச் சார்ந்த லிலியந்தால் விமானத்தை வடிவமைக்க முயன்று,அதன் சோதனை ஓட்டத்தில் இறந்தவர். தாங்கள் விமானத்தை வடிவமைத்து வெற்றியடைந்த பிறகு “ லிலியந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி முன்னோடிகளில் மிகப்பெரியவர்.மேலும் உலகம் அவருக்கு ஒரு பெரிய கடன்பட்டுள்ளது “ என்று வில்வர் ரைட் கூறியிருக்கிறார். ரைட் சகோதரர்களுக்கு முந்தைய ஆராய்ச்சியாளர்கள் எல்லோருமே கீழே மோட்டார் கார் ஓடுவதைப் போலவே உயரத்தில் ஓடவேண்டும் என்ற வகையிலே தங்கள் ஆராய்ச்சியைச் செய்திருக்கிறார்கள்.அந்த முயற்சியில் பலர் தோல்வியடைந்திருக்கிறார்கள். தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.
ஆனால் ரைட் சகோதரர்கள் பறவை ஓர் இடத்தில் பறக்கும்போது திரும்புவதற்குச் சிறகை விரித்து ஒருபக்கமாக வலது அல்லது இடது பக்கமாகச் சாய்ந்து திரும்புவதைக் கவனித்திருக்கிறார்கள்.இப்படி ஓர் இயந்திரமும் சாய்ந்து பறந்தால்,அதற்கும் இறக்கை இருந்தால் பறக்க இயலுமா,திரும்ப இயலுமா என்று சிந்தித்திருக்கிறார்கள்.வடி
ஆல்விர் ரைட் & வில்வர் ரைட் பட்டம் பெற்றவர்கள் அல்ல. நிறையப் படித்தவர்கள் அல்ல. ஆனால் இளமை முதலே அவர்களுக்கு ஆராயும் மனப்பான்மை இருந்திருக்கிறது.இயந்திரங்களி
1903 ஆம் ஆண்டு , டிசம்பர் 17ஆம் நாள் முதன் முதலில் ரைட் சகோதரர்கள் பறந்து காட்டியபோது,அதனைப் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் ஓர் இயந்திரத்தின் மூலமாகப் பறந்துவிட்டோம் என்று பத்திரிக்கைகளுக்குச் செய்திகளைக் கொடுத்தபோது,அதனை வெளியிட அந்தக்காலத்து பத்திரிக்கைகள் மறுத்துவிட்டன.இன்னும் சில பத்திரிக்கைகள் செய்தியினைத் திரித்து வெளியிட்டுள்ளன.சில ஆண்டுகளுக்குப் பின்தான் அவர்களின் கண்டுபிடிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.தங்
எலான் மாஸ்க் தனது ‘டெஸ்லா’ நிறுவனத்தின் பறக்கும் காரின் சோதனை ஓட்டத்தை நிகழ்த்திக்காட்டிய இந்த நேரத்தில் பலரும் அது குறித்த சந்தேகத்தை எழுப்புகிறார்கள்.தனியாக அதற்குப் பாதை வேண்டுமே?, எப்படி அது சாலையில் பறக்கமுடியும் என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். ஆனால் இது ஒரு மகத்தான கண்டுபிடிப்பு.எதிர்காலத்தில் பலருக்கும் பயன்படப்போகும் கண்டுபிடிப்பு என்பது மட்டும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
விமானம் பறப்பதற்குத் தேவைப்படும் சிறப்பு வகைப் பெட்ரோலியப் பொருட்கள் ,இந்தப் பறக்கும் கார்களுக்குத் தேவையில்லை, காற்றிலேயே பறக்கும், சூரிய ஒளி மின்சக்தியைப் பயன்படுத்திப் பறக்கும் காராக இது இருக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள்.வானில் பறந்தால் என்ன, தனித்தன்மையான ரோட்டில் பறந்தால் என்ன ,அதிவேக சாதனமாக நமது பயணத்திற்கு உதவினால் சரியே.எளிய மக்களுக்கும் பயன்படுத்தும் வகையில் அமைந்தால் பெரும் மகிழ்ச்சியே.



No comments:
Post a Comment