Tuesday, 3 November 2026

மதுரையில் பேரா கி.ஆழ்வார் அவர்கள் மொழி பெயர்த்த ‘Nectar of Music ‘ என்னும் நூலின் அறிமுக விழா...

 



திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் மேனாள் ஆங்கிலத்துறைத் தலைவர் பேரா கி.ஆழ்வார் அவர்கள் ,புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் ‘இசையமுது ‘ என்னும் கவிதைத் தொகுப்பினை ஆங்கிலத்தில் ‘Nectar Of Music ‘ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார்.அந்த மொழிபெயர்ப்பு நூல் அறிமுக விழா மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள IGSR’ அரங்கத்தில் 31.10.2026 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் மாணவிகள் சு.திவ்யதரிசினி  மற்றும் சு.மகாமதி இருவரும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.



வரவேற்புரை வழங்கிய பேரா கி.ஆழ்வார் அவர்களின் மூத்த மகன் திரு ஆ.பரணீதரன் அவர்கள்...அருகில் நான்(வா.நேரு)


நிகழ்விற்கு ஆதித்தனார் கல்லூரியின் மேனாள் மாணவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார்.வந்திருந்த அனைவரையும் ஆ.பரணீதரன் வரவேற்றார்.நிகழ்வில் 90 வயதுடைய பேரா கி.ஆழ்வார் அவர்களும் அவரது இணையர் அம்மா சரோஜா அவர்களும் பங்கேற்றனர்.

பேரா கி.ஆழ்வார் அவர்கள்,அவரது இணையர் அம்மா சரோஜா அவர்கள், வாழ்த்துரை வழங்கிய தூத்துக்குடி சுப்பையா வித்தியாலாயா மேல் நிலைப்பள்ளியின் மேனாள் ஆசிரியர் திருமதி உஷா பாலகிருஷ்ணன் அவர்கள்.
தூத்துக்குடி சுப்பையா வித்தியாலாயா மேல் நிலைப்பள்ளியின் மேனாள் ஆசிரியர் திருமதி உஷா பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நினைவுப் பரிசினை பேரா கி.ஆழ்வார் அவர்கள் வழங்கினார்.

தூத்துக்குடி சுப்பையா வித்தியாலாயா மேல் நிலைப்பள்ளியின் மேனாள் ஆசிரியர் திருமதி உஷா பாலகிருஷ்ணன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தினார்.. திருமதி விமலா அவர்கள் (டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் மருமகள்)

நிகழ்வில் தூத்துக்குடி சுப்பையா வித்தியாலாயா மேல்நிலைப்பள்ளியின் மேனாள் ஆசிரியர் உஷா பாலகிருஷ்ணன் அவர்கள் பேரா ஆழ்வார் அவர்கள் மொழி பெயர்ப்பு  நூல் பற்றிக் குறிப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார்.ஆதித்தனார் கல்லூரியின் மேனாள் மாணவர் ,மதுரை காந்திய சிந்தனைக் கல்லூரியின் மதிப்புறு இயக்குநர் முனைவர் சு.ஆண்டியப்பன் அவர்கள் மொழி பெயர்ப்பு நூலில் உள்ள கவிதைகளைக் குறிப்பிட்டும்,பேரா ஆழ்வார் அவர்களின் மாணவர்களுக்கான பணிகள் பற்றியும் குறிப்பிட்டு வாழ்த்தினார்.,மதுரை காந்தி அருட்காட்சியகத்தின் செயலாளர் திரு கே.ஆர். நந்தாராவ்,மேனாள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களுக்கும் காந்தி அருங்காட்சியகத்திற்கும் உள்ள தொடர்புகளை நினைவுபடுத்தி,முதல்வர் அவர்களோடு மிக நெருக்கமாக இருந்த பேரா ஆழ்வார் எனக் குறிப்பிட்டு   ,மொழி பெயர்ப்பு நூலினைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

முனைவர் சு.ஆண்டியப்பன் அவர்கள்..


முனைவர் சு.ஆண்டியப்பன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திய ஆதித்தனார் கல்லூரியின் பழைய மாணவர்  தூத்துக்குடி திரு.பாலகிருஷ்ணன்.
முனைவர் சு.ஆண்டியப்பன் அவர்களுக்கு நினைவுப் பரிசினை பேரா கி.ஆழ்வார் அவர்கள் வழங்கினார்.



நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் செயலாளர் திரு கே.ஆர். நந்தாராவ் அவர்கள்.

திரு கே.ஆர். நந்தாராவ் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திய ஆதித்தனார் கல்லூரியின் பழைய மாணவர் மதுரை  திரு.வேலாயுதம் 


மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் செயலாளர் திரு கே.ஆர். நந்தாராவ் அவர்களுக்கு நினைவுப் பரிசினை பேரா கி.ஆழ்வார் அவர்கள் வழங்கினார்.


தொடர்ந்து ஆண்டிபட்டி & தேனி தி லிட்டில் ஃப்ளவர் பள்ளிகளின் தாளாளர் , திரு எ.ஹென்றி அருளானந்தம் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.அதில் தான் எழுதிய பேரா கி.ஆழ்வார் பற்றிய ஆங்கிலக் கவிதையை அரங்கில் வாசித்தார்.1972-75-களில் தன்னோடு ஆதித்தனார் கல்லூரியில் படித்த சென்னையில் இருக்கும் திரு எம்.பி.கணபதி அவர்கள் தன்னிடம் பேசி இந்த நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிட்டார் என்று அவருக்கு நன்றி தெரிவித்தார்.  இன்றைக்கு இருக்கும் எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் திராவிட இயக்கத்திற்கு நன்றி சொல்லவேண்டும்.அந்த இயக்கத்தால்தான் நாம் பதவி பெற்றோம், பணிகள் பெற்றோம் என்று சொல்லி,மொழி பெயர்ப்பு நூலின் சிறப்புகளையும் தனது வகுப்பறையில் நடந்த  ஆழ்வார் சார் பற்றிய  பல செய்திகளையும்  அரங்கில் பகிர்ந்து கொண்டார்.
திரு எ.ஹென்றி அருளானந்தம் அவர்கள் சிறப்புரை

 திரு எ.ஹென்றி அருளானந்தம் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திய ஆதித்தனார் கல்லூரியின் பழைய மாணவர் சங்கரன்கோவில்  திரு.அய்யாத்துரை  

 திரு எ.ஹென்றி அருளானந்தம் அவர்களுக்கு நினைவுப் பரிசினை பேரா கி.ஆழ்வார் அவர்கள் வழங்கினார்.


திரு எ.ஹென்றி அருளானந்தம் அவர்கள்  நினைவுப் பரிசினை பேரா கி.ஆழ்வார் அவர்களுக்கு  வழங்கினார்.

தொடர்ந்து மதுரை CEOA கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.இராசா கிளைமேக்சு அவர்கள் தான் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 1971-74 காலகட்டத்தில் படித்ததை  நினைவு கூர்ந்தார். ,ஆழ்வார் சார் அவர்கள் கற்பித்த ஆங்கிலம் இன்றைக்குவரை தனக்கு உதவுவதாகக் குறிப்பிட்டார்.தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு ஆழ்வார் சார் அவர்கள் மொழிபெயர்த்த நூலின் சிறப்புகளைக் குறிப்பிட்டு,இனிமேல் மொழி பெயர்ப்பு செய்பவர்களுக்கு ஒரு மாதிரி நூலாக(Reference book) இந்த 'Nectar of Music ' நூல் இருக்கிறது  என்று பாராட்டினார். தமிழ் மற்றும் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் சிறப்புகளையும் குறிப்பிட்டுச் சிறப்புரையாற்றினார்.

மதுரை CEOA கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.இராசா கிளைமேக்சு அவர்கள்


 டாக்டர் எம்.இராசா கிளைமேக்சு அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திய ஆதித்தனார் கல்லூரியின் பழைய மாணவர் மதுரை நீலகண்டன் 


டாக்டர் எம்.இராசா கிளைமேக்சு அவர்களுக்கு நினைவுப் பரிசினை பேரா கி.ஆழ்வார் அவர்கள் வழங்கினார்


தொடர்ந்து சிறப்புரையாற்றிய திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்(பொறுப்பு ) டாக்டர் ச.பிரபாகரன் அவர்கள் ,மொழி பெயர்ப்பு நூலான Nectar Of Music என்னும் நூலின் சிறப்புகளைப் பட்டியலிட்டு உரையாற்றினார்.தான் மொழி பெயர்த்து இருந்தால் எப்படி இந்த நூலை மொழி பெயர்த்திருப்பேன் என்று சில வரிகளை மொழி பெயர்த்துப்பார்த்தேன்.அவர் ஒரு வரியில் மொழி பெயர்த்திருப்பதை நான் மொழி பெயர்த்திருந்தால் பல வரிகள் செலவழித்திருப்பேன்.அப்படி ஒரு அருமையான மொழி பெயர்ப்பாக,இந்த 'Nectar Of Music ' நூல்  இருக்கிறது.மிகவும் கண்டிப்பான ஆசிரியராக வகுப்பில் இருப்பார். தான் ஆதித்தனார் கல்லூரியில் பயின்ற காலத்தில் ,தனக்கும் பேரா ஆழ்வார் அவர்களுக்கும் இருந்த உறவு பற்றியும்,பேரா ஆழ்வார் அவர்கள் ஒரு பெரியாரிஸ்ட் என்பதையும் தான் கல்லூரி மாணவராகக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றபோது தன்னைக் கட்டியணைத்து பேரா ஆழ்வார் பாராட்டியது இன்னும் என் நினைவுகளில் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். ஆங்கிலக் கவிஞர்கள் ஷெல்லி,மில்டன் ஆகியோரோடு கவிஞர் பாரதிதாசன் அவர்களை ஒப்பிட்டுப் பேசினார். இந்த மொழி பெயர்ப்பினை எவ்வளவு ஈடுபாட்டோடும், நடுநிலையோடும்  பேரா ஆழ்வார் அவர்கள் மொழி பெயர்த்திருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டு மிக ஆழமான இலக்கிய உரையாக  நிறைவுரையாற்றினார்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்(பொறுப்பு ) டாக்டர் ச.பிரபாகரன் அவர்கள்

 டாக்டர் ச.பிரபாகரன்  அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திய ஆதித்தனார் கல்லூரியின் பழைய மாணவர் SBI  மேனாள் முதன்மைப் பொதுமேலாளர் திரு ஆறுமுகப்பாண்டியன். 


டாக்டர் ச.பிரபாகரன்   அவர்களுக்கு நினைவுப் பரிசினை பேரா கி.ஆழ்வார் அவர்கள் வழங்கினார்


நிகழ்வில் பேரா கி.ஆழ்வார் அவர்கள் ஏற்புரையாற்றினார்.தனது மாணவர்கள் இன்றைக்குப் பல்வேறு பெரிய பொறுப்புகளில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பாரதிதாசன் கவிதைகள் தனது இளமைக்காலம் முதல் மீண்டும் மீண்டும் படித்த, மனதில் பதிந்த கவிதைகள் என்றார்.எனவே அதனை மொழிபெயர்த்தேன். தான் 1983-ல் பெரியார் பட்டயச்சான்றிதழ் பெற்றதையும், பாரதியார் ,பாரதிதாசன் பற்றியும் குறிப்பிட்டார். தனது இணையர் அம்மா சரோஜா அவர்களின் ஒத்துழைப்பால் தானும்,பிள்ளைகளும் உயர்ந்தோம் என்றும்  ,தனது பிள்ளைகள் இந்த நூலினைப் பணம் பெறாமல் கொடுப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறி உரையாற்றினார்.
பேரா கி.ஆழ்வார் அவர்கள் ஏற்புரை..


பேரா கி.ஆழ்வார் அவர்களுக்கும் அம்மா சரோஜா ஆழ்வார் அவர்களுக்கும்  பழைய மாணவர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கினர்.



மதுரை யாதவர் கல்லூரியின் மேனாள் ஆங்கிலத்துறைத் தலைவர் டாக்டர் சண்முகையா, ,ஆதித்தனார் கல்லூரியின் மேனாள் மாணவர் அய்யாத்துரை 
ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.

நிறைவாக சே.கணபதிராஜா அவர்கள் நன்றியுரையாற்றினார்.அவர் தனது நன்றியுரையில், " பேரா ஆழ்வார் சார் அவர்கள் என்னிடம் பேசிய 30 நிமிடங்கள்தான் என் வாழ்க்கையின் போக்கையே மாற்றியது. நான் போட்டித் தேர்வு எழுதியதற்கும், பணியில் சேர்ந்ததற்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டில் அவர் என்னிடம்  தனிப்பட்ட முறையில் அரை மணி நேரம் பேசி,அறிவுரை சொன்னதே காரணம் ' என்று குறிப்பிட்டு ஆழ்வார் சார் அவர்க்ளுக்கு நெகிழ்வாக நன்றி கூறி பின் அனைவருக்கும் நன்றி கூறினார்.



திரு சே.கணபதிராசா   அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திய ஆதித்தனார் கல்லூரியின் பழைய மாணவர் திரு செல்வகணேசு.. 



திரு சே.கணபதிராசா   அவர்களுக்கு நினைவுப் பரிசினை பேரா கி.ஆழ்வார் அவர்கள் வழங்கினார்






எனது பேரா கி.ஆழ்வார் அவர்களால் பொன்னாடை எனக்குப் போர்த்தப்பட்ட பெருமையான தருணம்.

நிகழ்வினை ஜெம் டிவி நிறுவனத்தினர் முழுமையாகப் பதிவு செய்தனர்.அதனை அவர்களின் இணையதளத்திலும் வெளியிட்டனர். விழாக்குழுவினர் சார்பாக மனமார்ந்த நன்றி அவர்களுக்கு.மதுரையைச் சார்ந்த போட்டோகிராபர் இராதா அருமையாக புகைப்படங்களை எடுத்துக்கொடுத்துள்ளார்.அவருக்கு அன்பார்ந்த நன்றி.இந்த  நிகழ்வினை இன்றைய நிகழ்வில் வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கும் , வந்திருந்த பத்திரிக்கை நிருபர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

.திருச்செந்தூர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் திரு இரா.ஆறுமுகப்பாண்டி,திரு நீலகண்டன், திரு பாலகிருஷ்ணன்,திரு செல்வகணேஷ்,திரு அய்யாத்துரை திரு வேலாயுதம்,, கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் மருமகள் விமலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை அணிவித்தனர்.  திரு கி.ஆழ்வார் அவர்களின் மகன் ஆ.பரணீதரன்-அவரது இணையர் ப.தனலச்சுமி,மகன் ஆ.சிரீதரன் வில்வ குமார், மகள் ஆ.கிருஷ்ணவேணி ,அவரின் இணையர் க.செந்தில் அதிபன் மற்றும் சம்பந்தி பால்கிருஷ்ணன் ஆகியோரும் . ஆண்டிபட்டி&தேனி லிட்டில் ஃபளவர்  பள்ளி,மதுரை சிஇஓஏ பள்ளி நிர்வாகிகள்  , பலரும்  கலந்து கொண்டனர். 'Nectar Of Music' நூலின் அறிமுக விழா காலை 10.30 மணிக்குத் தொடங்கி மதியம் 2 மணிவரை   நடைபெற்றது. நிறைவாக பேரா கி.ஆழ்வார் அவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திட்ட இனிய உணவோடு நிகழ்வு நிறைவு பெற்றது.

 

5 comments:

  1. சே.கணபதிராசா3 November 2026 at 08:51

    விழாவினை மிக அற்புதமாக விவரித்துள்ளீர்கள் தோழர் நேரு அவர்களே... மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....

    ReplyDelete
  2. நன்றிங்க சார்.

    ReplyDelete
  3. நீலகண்டன்,மதுரை3 November 2026 at 09:05

    மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  4. Very good Narration Nehru... Vazthukkal ❤️💐🙏

    ReplyDelete