Tuesday 14 February 2012

மராட்டிய மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு (Federation of Indian Rationalist Associations - FIRA) 8ஆவது தேசிய மாநாட் டில் பகுத்தறிவாளர் கழகம் பங்கேற்றது

நாகபுரி, பிப்.14-அரசி யலிலிருந்து மதத்தைப் பிரித்திட நாடாளுமன் றம் நோக்கிப் பயணம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது.

மராட்டிய மாநிலம் நாகபுரியில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு (Federation of Indian Rationalist Associations - FIRA) 8ஆவது தேசிய மாநாட் டில் பகுத்தறிவாளர் கழகம் பங்கேற்றது. பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய இருநாள்களில் நடைபெற்ற மாநாடு, நாகபுரி நகரின் மய்யப் பகுதியான சீதாபுல்டி பகுதியில் அமைந்துள்ள ராணி ஜான்சி சதுக்கம் - மூர் ஹிந்தி பவன் - ராம் கோபால் மகேஸ்வரி சபாகிருஹா மண்டபத் தில் நடைபெற்றது.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட பேராளர்கள் மாநாட் டில் கலந்துகொண்ட னர். இந்திய பகுத் தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பினை நிறு விய அமைப்புகளுள் பகுத்தறிவாளர் கழக மும் ஒன்று. மாநாட்டில் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு, பொதுச்செயலாளர்கள் - வீ.குமரேசன், வடசேரி வ.இளங்கோவன், துணைத் தலைவர் புதுவை மு.ந.நடராசன், மதுரை நகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சே.முனியசாமி மற்றும் பாண்டிச்சேரி தோழர்கள் வெற்றி வேல், எல்.பழனி ஆகி யோர் கலந்துகொண் டனர்.

தொடக்க விழா

முதல்நாள் (பிப்.11) காலை 10.30 மணி அளவில் மாநாட்டு தொடக்க விழா நடை பெற்றது. நாக்புரி - ராஷ்ட்ரசன்ட் டக் டோஜி மகராஜ் பல் கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் விலாஸ் சப்கல் மாநாட் டினைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற் றினார். நாகபுரி கெயிக் வாட் பாட்டீல் குழு கல்வி நிறுவனங்களின் தலைவர் பேராசிரியர் சரத் பாட்டீல் தலைமை உரையினை வழங்கி னார். இந்திய பகுத்தறி வாளர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் மாநாட்டின் நோக்கம் பற்றி எடுத்துக் கூறினார். மாநாட்டினை நடத்தும் பொறுப் பினை ஏற்றுக்கொண்ட அமைப்பான அகில பாரதிய அந்தஸிருத்த நிர்மூலன் சமிதியின் பொதுச்செயலாளர் ஹாரிஷ் தேஷ்முக் அறிமுக உரையாற்றிட செயல் தலைவர் உமேஷ் செளபே வருகை தந் தோரை வரவேற்றார்.

தொடக்க விழா வினை அடுத்து, கூட்ட மைப்பின் அங்கங் களான பல்வேறு பகுத் தறிவாளர் அமைப்பு களின் பொறுப்பாளர் கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்களது அமைப்பின் செயல் பாடுகள் பற்றிய அறிக் கையினை அளித்தனர். பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பாக மாநிலத் தலைவர் வா.நேரு அறிக் கையினை அளித்தார். பகுத்தறிவாளர் கழகத் தின் கடந்தகாலச் செயல் பாடுகளைக் குறிப் பிட்டுவிட்டு, 2011ஆவது ஆண்டின் செயல்பாட் டுச் சிறப்பாக திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாடு பற்றிய குறிப்பினை அளித்தார். உலக நாத்திகர் மாநாட் டில் கலந்துகொண்ட, இந்த மாநாட்டிற்கு வருகை தந்த பேராளர் கள் உலக நாத்திகர் மாநாட்டுச் சிறப்பினை நினைவுகூர்ந்து பாராட்டினர்.



இந்திய பகுத்தறிவாளர் சங்க கூட்டமைப்பின் 8ஆவது தேசிய மாநாட்டில் பங்கேற்ற தமிழக பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களுடன் பிற மாநில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். (மராட்டிய மாநிலம் நாக்பூர், 12.2.2012)

அடுத்து நடைபெற்ற கருத்தரங்க அமர்வில், நாட்டு வளர்ச்சியில் பகுத்தறிவின் பங்கும் மனிதநேயமும் (Role of Rationalism in Develop- ment of Country & Humanism) எனும் தலைப்பில் அகில பார திய அந்தஸிருத்த நிர் மூலன் சமியின் நிறுவ னரும், அமைப்பாளரு மான பேராசிரியர் ஸ்யாம் மானவ் கருத் துரை வழங்கினார்.

பிற்பகல் அமர்வில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்ட மைப்புப் புரவலர் யு.கலா நாதன், இந்தியாவை மதச்சார்பின்மைப்படுத்தல் (Secularisation of India)எனும் தலைப்பில் உரை யாற்றினர். மாலையில் பகுத்தறிவுப்பிரச்சார நடைமுறையினை விளக் கும் வகையில் ஆணி மேல் நடத்தல் செயல் முறை நடைபெற்றது.

இரவு உணவுக்குப் பின்னர் 9 மணி அளவில் பன்னாட்டு மனிதநேயர் மற்றும் நன்னெறி ஒன்றி யத்தின் (International Humanist and Ethical Union) பன்னாட்டு இயக்குநர் பாபு கோகி னேனி, பல்வேறு பகுத் தறிவாளர் அமைப்புப் பொறுப்பாளர்களிடம் கலந்துரையாடினார். பகுத்தறிவாளர்கள், அமைப்பு அடிப்படை யில் பணியாற்றும் பொழுது நேர்கொள் ளும் இன்னல்கள், சவால்கள் மற்றும் அவைகளைக் களைவ தற்கு மேற்கொள்ளப் பட வேண்டிய அணுகு முறைகள் பற்றி விளக் கம் அளித்தார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி

மூடநம்பிக்கை ஒழிப்பு, பில்லி சூனிய எதிர்ப்பு ஆகிய செயல் பாடுகளை, பெரும் பான்மை அமைப்பு நடவடிக்கைகளாகக் கொண்டுள்ள, கூட்ட மைப்பு மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்த அகில பாரதிய அந்த ஸிருத்த நிர்மூலன் சமிதி அமைப்பினர். மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடத்தினர்.

பேயாட்டம், அலகு குத்தி கார் இழுப்பு ஆகியவற்றின் செயல் முறை விளக்கங்கள் ஊர்வலத் தின் அம்சங்களாக இருந்தன. நமது பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் ஊர்வலத்தில் பங் கேற்றுச் சென்றனர். ஊர்வலம் முடிவடைந்த பின்பு, அரங்க நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடை பெற்றன.

பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் தலைமையில் கருத்தரங்க அமர்வு

இந்தியாவில் அதிகமாகி வரும் சகிப்பின்மை (Rise of intolerance in India) எனும் தலைப்பில் கருத்தரங்க அமர்வு துவங்கியது. அமர்வினை பகுத் தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தலைமையேற்று நடத்தினார். தனது உரையில் சகிப்புத் தன்மை எனும் தன்மை கடவுள், மத ஆதிக்கத்தில் சமூக அடி மைத்தனத்திற்கு வித்திட்ட வரலாற்றைச் சுருக்கமாக கூறி அதனை தகர்த்திட தந்தை பெரியார், மகாத்மா ஜோதி பாபுலே, சாகுமகராஜ், நாரா யணகுரு, அண்ணல் அம்பேத் கர் ஆகியோர் பாடுபட்ட விதம் குறித்து விளக்கினார். தற் பொழுது நிலவுவதாகக் கூறுப் படும் சகிப்பின்மை என்பது மத வெறியாளர்கள் தங்களது ஆதிக்க நிலைப்பாட்டிற்கு ஏற்றவாறு கற்பிக்கப்படுகின்ற நிலைமையே எனப் பேசினார்.


மதச்சார்பற்ற நாடு என அரசமைப்புச்சட்ட ரீதியாக இந்தியா இருந்தாலும் செயல் பாட்டைப் பொறுத்த அளவில் எல்லாம் மாறுபட்டு, வேறு பட்டு உள்ள நிலைமை விளக்கப் பட்டது. ராஜஸ்தான் மாநிலம் - ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் சாத் தானின் வேதங்கள் எழுதிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பங்கேற்பதை தடுக்கும் விதமாக மத ஆதிக்க சத்திகள் நடந்து கொண்ட விதம், அதற்கேற்ப அரசின் கண்டும் காணாத பொறுப்புள்ள அணுகுமுறைப் போக்கு ஆகியவற்றைக் கண் டித்து தமிழர் தலைவர் கி.வீரமணி விடுதலை இதழில் விரிவாக விடுத்த கண்டன அறிக்கையினைப்பற்றி விளக்கிப்பேசினார். சகிப் பின்மை என்பது பகுத்தறி வாளர் அணுகுமுறையில் புரிந்துகொள்ளப்படவேண்டும். அதுவே நிலைத்து நிற்கும் இணக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தும் என நிறைவாகக் கூறி முடித்தார். அமர்வில் ஒரிஸா பகுத்தறிவாளர் மன்றத் தலைவர்பேராசிரியர் தானேஸ்வர் சாகு, விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் இயக்குநர் கோ.விஜயம், ஒரிஸ்ஸா -ஹஆடீகுடீஐ அமைப்பின் தலைவர் இராமச் சந்திர சி.எஸ்டி., வால்டேர், ஜார்கண்ட் மாநில சமூக நலத்திற்கே அறிவியல் அமைப் பின் தலைவர் டாக்டர் ஆனந்த், விசாகபட்டினம் இந்திய நாத்திகர் சங்கத்தலைவர் ஜெய கோபால், பஞ்சாப் தர்க்சீல சங்கத்தின் தலைவர், பேராசி ரியர் பல்வீர் சிங்பர்னாலா, ஆகியோர் பங்கேற்று கருத் துரை வழங்கினர்.

குழு விவாதத்தில் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பங்கேற்பு

நண்பகல் உணவிற்குப் பின் நவீன சாமியார்களின் ஆன் மிகத் தொழில் (Modern Spiritual Godman’s Industry) எனும் தலைப்பில் குழு விவாதம் நடை பெற்றது. நிகழ்விற்கு இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்புச் தேசியச் செய லாளர் ஆர்.ஜி.ராவ் தலைமை யேற்றார். பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா.நேரு, குழுவிவாதத்தில் பங்கேற்றுப் பேசினார். சாய்பாபா செய்த மோசடிகள், அவரது மறை விற்குப் பின் அந்த உண்மைகள் வெளிப்பட்ட நிலைமைகள் குறித்துப் பேசினார். காஞ்சி சங்கராச்சாரியார், ஆன்மிகப் போர்வையில் கிரிமினல் குற்றங்கள் புரிந்து நீதிமன்ற நடவடிக்கைகளில் உள்ளது பற்றியும், அந்த சங்கராச்சாரி யின் லீலைகளை திருவிளை யாடல்புராணம் என்ற தலைப் பில் தொடர் சொற்பொழிவு களாக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய செய்திகளையும் விரிவாகப் பேசினார். குழு விவாதத்தில் பிற மாநிலபகுத்தறிவாளர் அமைப்புப் பொறுப்பாளர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இந்திய பகுத்தறிவாளர் சங்க கூட்டமைப்பின் புதிய பொறுப்பாளர்கள் தெரிவு

இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் அடுத்த இரண்டு ஆண்டுக் களுக்கான பொறுப்பாளர்கள் ஒருமனதாக தெரிவு செய்யப் பட்டனர். கூட்டமைப்பின் தேசியத் தலைவராக பேராசி ரியர் நரேந்திர நாயக், தேசியச் செயலாளராக யு.கலாநாதன், தேசியத் துணைத்தலைவராக பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன், தென் மண்டல செயலாளராக பகுத் தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா.நேரு, ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். மேலும் பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வடசேரி இளங்கோவன் மற்றும் துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர்.


இரண்டு நாள் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங் களின் கூட்டமைப்பு 8ஆவது தேசிய மாநாடு வருங்காலச் செயல்பாடு மென்மேலும் வலுப்பட்டு பரந்துபட வேண் டும் எனும் உறுதி மொழி யோடு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு இனிதாக முடிவுற்றது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.2013ஆம் ஆண்டில் முதன் மைச் செயல்பாட்டுத் திட்ட மாக அரசியலிலிருந்து மதத் தைப் பிரித்திட வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கிய பயணம் நடத்துதல்

2. மதச்சார்பின்மை ஜன நாயக நாட்டில் நடைமுறைப் படுத்துவதற்கு ஏதுவாக உள்ள அம்சங்களை சட்ட வடிவ மாக்கிட தனியாக சட்டக்குழு (Law Commission) அமைத்திட வலியுறுத்தல்.

3. மூநடம்பிக்கை ஒழிப்பு, பில்லி சூனியம் அழிப்பு ஆகிய வற்றை கடுமையாக்கிட சட்டங் கள் கொண்டுவர அரசினை வலியுறுத்தல்

4. அனைவருக்கும் சமமான குடி உரிமைச் சட்டவடிவின் (ருகைடிசஅ ஊஎடை ஊடினந) முன்மாதி ரியை (Uniform Civil Code) பல்வேறு பகுத்தறி வாளர் அமைப்புகளுடன் கலந்து தயாரித்தல்.

5. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மூடநம்பிக்கை ஒழிப்பு பயிற்சி முகாம்களை பரந்துபட்டு நடத்திடுதல்.

No comments: