பகுத்தறிவாளர்கள் பாதுகாப்போடு வாழ்வதற்கு ஏற்ற நாடு இந்தியா அல்ல....
( மோஹித் எம். ராவ்)
(குடும்பத்தினரிடமிருந்து வரும் அழுத்தம் அதிகரித்திருந்த போதிலும், தாக்கப்படலாம் என்ற அச்சுறுத் தலுக்கான அறிகுறிகள் தென்பட் டாலும், இறுதி வரை போராடுவதைத் தவிர தனக்கு வேறு வழி இல்லை என்று நரேந்திர நாயக் கூறுகிறார். "கவுரியின் இறப்புக்குப் பிறகு, தற் காலிகமாக அயல் நாட்டுக்குச் சென்றுவிடும்படி கேட்டுக் கொண்டு தொலைபேசி செய்திகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. இங்கு எனது சமூகத்தில் நிலவும் பல தவறு களை சரி செய்ய வேண்டியிருக்கும் போது, நான் இங்கிருந்து ஏன் ஓட வேண்டும்?" என்று அவர் கேட்கிறார்.)
கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒருவன் தனது காரை நிறுத்தி, தன்னை ஒரு படம் எடுத்துக் கொண்டு, பின்னர் காரில் ஏறி வேகமாகப் போய்விட்டான் என்று கவுரியின் நண்பரும், அவரது தீவிர ஆதரவாளரும், முற்போக்கு சிந்தனை யாளரும், கன்னட எழுத்தாளருமான யோகேஷ் மாஸ்டர் கூறினார். "அன்று (வியாழக்கிழமை) இரவு ஒருவன் இருசக்கர வாகனத்தில் சிறிது நேரம் சந்தேகப்படும்படி என்னைப் பின் தொடர்ந்து வந்தான். இப்போது சில காலமாகவே நான் அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். ஆனால், இப்போது, கவுரி கொல்லப்பட்ட பிறகு அந்த அச்சம் நிச்சயமாகவே உச்சத்திற்கு சென்று விட்டது" என்று யோகேஷ் கூறுகிறார்.
"2015 இல் கல்வியாளர் எம்.எம். கல்புர்கி கொல்லப்பட்ட பிறகு, லோகேஷின் வலியுறுத்தல் காரணமாக எனக்கு துப்பாக்கியுடன் கூடிய ஒரு பாது காவலர் நியமிக்கப்பட்டார். இப்போது மறுபடியும் காவல் துறை பாதுகாப்பு திரும்ப வந்துவிட்டது" என்று அவர் கூறுகிறார். சட்டப்படியான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள 18 எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள், சமூக ஆர்வலர்களில் யோகேஷ் ஒருவர். முன்னேற்றக் கருத்து கொண்ட மக்களுக்கு எதிராக தற்போது அச்சுறுத்தல் நிலவும் கண்ணோட்டத்திற்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும்.
இந்த எழுத்தாளர் முரண்பாட்டுக்கோ, அச்சுறுத்தல்களுக்கோ, தாக்குதலுக்கோ புதியவர் அல்ல. 2013 ஆம் ஆண்டு அவரது நூல் தந்தி (ஞிuஸீபீலீவீ) வெளியானது முதல் இவை தொடங்கிவிட்டன. அந் நூலில் பிள்ளையாரைப் பற்றி எழுதி யிருப்பது வலதுசாரி குழுக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாம். அப்போதிருந்து அவருக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தேவன் கரையில் நடைபெற்ற கவுரி லங்கேஷின் தந்தையின் நினைவு நாள் போது, யோகேஷின் முகத்தில் ஒரு கும்பல் கருப்பு எண்ணெய் பூசினர்.
இவற்றால் எல்லாம் அவரது சமூகத் தொண்டு ஆர்வம் முனை மழுங்கிப் போய்விடவில்லை என்றாலும், முரண்பட்ட ஒரு எழுத்தாளர் என்ற அவரது புகழுக்கு ஒரு விலையை அவர் கொடுக்க வேண்டியிருந்தது. அவரது வாழ்வாதாரமாக இருந்த நாடகம் நடத்துவது, எழுதுவது, கருத்தரங்குகள் நடத்துவது ஆகியவற்றின் மூலம் அவருக்குக் கிடைத்து வந்த வருவாய் கடந்த இரண்டு ஆண்டுகளில் வறண்டு போனது.
"நான் கலந்து கொள்வதில் ஆபத்து உள்ளது என்ற கருத்து நிலவுவதால், எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைப்பதை மக்கள் நிறுத்திக் கொண்டனர். நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் அது பற்றி காவல் துறைக்கு தெரிவித்து, அதற்கு எதிராக எதிர்ப்பு ஏதேனும் இருந்தால், பாதுகாப்பு அளிக்கச் செய்ய வேண்டியதாகவும் இருந்தது. இது போன்றதொரு தலை வலியை ஏற்படுத் திக் கொள்ள யார்தான் விரும்புவார்கள?" என்று அவர் கேட்கிறார். தொலைவில் இருக்கும் மங்களூருவிலும், அச்சுறுத் தல்கள் மற்றும் கொல்லப்பட்ட நண்பர் களின் பந்தமும் பகுத்தறிவாளரான நரேந்திர நாயக்குடன் யோகேஷை கட்டிப் போட்டிருக்கின்றன. நரேந்திர நாயக்குக்கு இரண்டு ஷிப்டுகளில் இரண்டு காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது. "தாக்குதலுக்கு இலக்காக உள்ளவர்களின் பட்டியலில் 7 ஆம் இடத்தில் நான் இருக்கிறேன். இப்போது எனக்கு 6 ஆவது இடத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்" என்று அவருக்கே உரித் தான சோகமான நகைச்சுவை உணர் வுடன் அந்த மனஉறுதியும் ஆற்றலும் கொண்ட பகுத்தறிவாளர் கூறுகிறார்.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, மந்திர தந்திரங்களின் மோசடிகளை கடந்த 30 ஆண்டு காலமாக வெளிப் படுத்திக் கொண்டிருக்கும், 66 வயதான இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவ ரான நரேந்திர நாயக், இந்துத்துவ அமைப்புகள் மற்றும் மத அமைப் புகள் என மனதைக் கவரும் எதிரிகளின் பட்டியலை தயாரித்து வைத்துள்ளார்.
ஆன்லைனில் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்தபோது, 2016 ஆம் ஆண்டில் அவர் காவல்துறையிடம் ஒரு புகார் அளித்திருந்தார். இரண்டு பேர் தன்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் புகார் அளித்ததை அடுத்து அவருக்குக் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
குடும்பத்தினரிடமிருந்து வரும் அழுத்தம் அதிகரித்திருந்த போதிலும், தாக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலுக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், இறுதி வரை போராடுவதைத் தவிர தனக்கு வேறு வழி இல்லை என்று அவர் கூறுகிறார். "கவுரி யின் இறப்புக்குப் பிறகு, தற்காலிகமாக அயல் நாட்டுக்குச் சென்றுவிடும்படி கேட்டுக் கொண்டு தொலைபேசி செய் திகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. இங்கு எனது சமூகத்தில் நிலவும் பல தவறுகளை சரி செய்ய வேண்டியிருக்கும் போது, நான் இங்கிருந்து ஏன் ஓட வேண்டும்?" என்று கேட்கிறார்.
தாக்குதலுக்கு இலக்கானவர்களின் அந்தப் பட்டியலில் நரேந்திர நாயக்குக்கு மேலே இருக்கும் கே.எஸ்.பகவான் என்ற எழுத்தாளர் கடந்த 30 ஆண்டு காலமாக எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். ஆனால், இந்து வேத நூல்களை 2016 இல் அவர் பேசிய பேச்சில் கடுமையாக இழிவு படுத்தி விட்டார் என்பதால் அவர் தீவிர தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார். பேராசிரியர் கல்புர்கியின் கொலைக்குப் பிறகு, மைசூரில் வாழும் பகவான்தான் தங்களின் அடுத்த இலக்கு என்று ஆன் லைன் அச்சுறுத்தல்கள் பறைசாற்று கின்றன. இப்போது அவர் வெளியே எங்கே சென்றாலும் இரண்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் அவருடன் செல்கின்றனர். கவுரி லங்கேஷின் கொலைக்குப் பிறகு ஒரு சில மணி நேரத்திற்குள் இரண்டு முறை அவரை பாதுகாவலர்கள் சந்தித்து அவரது பாது காப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.
இவ்வாறு தற்போது நிலவும் சூழ்நிலை பதற்றம் நிறைந்ததாகவும், பிளவுபட்ட தாகவும் இருக்கும்போது, மூடநம்பிக்கை களுக்கு எதிரான பிரச்சாரத்தில் தனது பங்கினைப் பற்றி உற்சாகம் கொண்ட வராக பகவான் இருக்கிறார். எனது நூல்கள் இப்போது நன்றாக விற்பனை ஆகின்றன. நிகழ்ச்சிகளுக்கான கூடுதல் அழைப்புகள் எனக்கு வந்து கொண்டி ருக்கின்றன. அறிவியல் சான்றுகளின் ஆதரவு பெற்ற புதிய கருத்துகளை அறிந்து கொள்வதற்கு பெரும்பாலான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இப் போதும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்" என்று பகவான் கூறுகிறார். மகாராட்டிர மாநிலத்தில் பகுத்தறிவா ளர்கள் நரேந்திர தபோல்கர் 2013 ஆம் ஆண்டிலும், கோவிந்த பன்சாரே 2015 ஆம் ஆண்டிலும் கொல்லப்பட்டதற்குப் பிறகு அம்மாநிலத்தைச் சூழ்ந்த அச்சம் என்னும் மேகம் இன்னமும் விலக வில்லை.
மகாராட்டிராவில் விவசாயிகளுடன் பணியாற்றி வந்த இடதுசாரி சர்மிக் முக்தி தள அமைப்பின் தீவிர தொண்டரான 68 வயதான பாரத் பதங்கர், எந்த அச்சுறுத் தலையும் அலட்சியப்படுத்தக்கூடாது என்பதை நன்கு அறிந்திருந்தார். காவல் துறை பாதுகாப்பை ஏற்றுக் கொள்ள அவர் மறுத்த போதிலும், தொடர்ந்து அவருக்கு வந்த அச்சுறுத்தல்கள் காரண மாக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் ஒருவர் அவருடன் இருப்பதற்காக நிய மிக்கப்பட்டுள்ளார்.
ஜாதி ஒழிப்பு மற்றும் முஸ்லிம்கள், தலித்துகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர், இரண்டு பகுத்தறிவா ளர்களின் கொலைக்காக சனாதன் சன்ஸ்தா என்ற இந்து தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது அந்த அமைப்பினரை தன்மீது கோபம் கொள்ளச் செய்துள்ளது என்று அவர் கூறுகிறார். பன்சாரே கொலை செய்யப்பட்ட அன்று, சன்ஸ்தாவின் பத்திரிகையான சனாதன் பிரபாத் பத்திரிகையின் நகல் ஒன்று பதங்கரின் வீட்டில் போடப்பட்டிருந்தது. அதன் மீது எனது பெயரும், எனது கிராமத்தின் பெயரும் மட்டும் எழுதப் பட்டிருந்தது. இது தெளிவான ஓர் அச்சுறுத்தல் அல்லவா?" என்று அவர் கேட்கிறார்.
நன்றி: "தி இந்து" 10-09-2017
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.
நன்றி : விடுதலை 02.10.2017
.

2 comments:
வேதனை ஐயா
வேதனையோ வேதனை...
Post a Comment