ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் என்ன சூழல் ?
நாம் கண்கூடாக அந்தப் பலனை இப்போதும் அனுபவித்துக்கொண்டிருக்கிற சூழ்நிலை இருக்கிறது.இன்னும் தேவை அதிகமாக இருக்கிறது.காரணம் என்ன?.மக்கள் நல்வாழ்வுத்துறையிலே,மருத்துவ அடிக்கட்டுமானம் மிக முக்கியம்..முன்னாலே என்ன சூழல்?.ஒரு நூறாண்டுக்கு முன்னால் செல்லுங்கள். திராவிட மாடல்.திராவிடக் கருத்தியல் உருவாகுவதற்கு முன்னாலே என்ன சூழல்?.சமஸ்கிருதம் படித்தால்தான் அவர் மருத்துவராக முடியும் என்று சொல்லக்கூடிய சூழல்.சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவர் ஆகமுடியும் என்னும் சூழல்.சரி,எல்லோரும் சமஸ்கிருதம் படிக்க உரிமை உண்டா என்று சொன்னால் அவர்களே சொன்னார்கள்,சூத்திரர்களோ மற்றவர்களோ படிக்க முடியாது.பிராமணர்கள் மட்டும்தான் படிக்க முடியும்,பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்கமுடியும்.என்று அவர்கள் வைத்திருந்தார்கள்.உயர் ஜாதிக்கார்ர்கள் மட்டுமே படிக்கமுடியும்.இன்றைக்கு எல்லோரும் சமஸ்கிருதம் படிக்கலாம.மற்றவர்கள் படிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.ஏனென்றால் அந்த மொழி ஒரு உயிருள்ள மொழி அல்ல என்ற நிலையிலிருந்து மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.அது வேறு செய்தி.ஆனால் நண்பர்களே,நீங்கள் நினைத்துப்பார்க்கவேண்டும். அன்றைக்கு இருந்த நிலையை மாற்றி அனைவரும் மருத்துவம் படிக்கலாம் என்ற நிலையை ஆக்கியது திராவிடர் ஆட்சி.பனகல் அரசர் அவர்கள் பிரதமராக இருக்கும்போது அன்றைக்கு பிரதமர் என்ற வார்த்தை உண்டு.பனகல் அரசர் அவர்கள் முதலமைச்சராக இருந்து ஆட்சி புரிந்த நேரத்திலே அன்றைக்கு அதனை நீக்கி இருக்காவிட்டால் இன்றைக்கு எல்லா சமுதாயத்தினரும்,மருத்துவராகி இருக்க முடியுமா? அனைவர்க்கும் அனைத்தும் கிட்டி இருக்குமா?.
அதன் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை என்று சொல்லக்கூடிய ,Health democration என்று சொல்லக்கூடிய ஜனநாயகப்படுத்துதல் ,பொதுமைப் படுத்தப்பட்டு எல்லோருக்கும் எல்லோமுமாக இருக்கும் வாய்ப்பு கிட்டியிருக்குமா? அருள்கூர்ந்து எண்ணிப்பார்க்கவேண்டும்.அதன் பிறகு இட ஒதுக்கீடு,போராட்டங்கள், நூழைவுத்தேர்வு, அதற்கு மறுப்புகள்.இது எல்லாம் ஒவ்வொரு காலகட்டங்கள்.இந்தத் தடை ஓட்டப்பந்தயங்கள் எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.நமது நாட்டில் படித்தவர்களாக இருந்தாலும் கூட,அதையும் மீறி உயர் ஜாதிக்காரர்கள் படித்தால் எனனங்க ?அவங்களும் எல்லோருக்கும்தானே மருத்துவம் செய்யப்போகிறார்கள்,ஏங்க இவருக்கு இந்தக் குரோதமான உணர்ச்சி இருக்கிறது? என்று சில நண்பர்கள் கேட்கலாம்.அவர்களுக்கு ஒரு சம்பவத்தைச்சொல்லுகிறேன்.
அண்ண்ல் அம்பேத்கரின் நூலில்:
இந்த அறிவார்ந்த அரங்கத்திலே,சில செய்திகளை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள்.என் கையில் இருப்பது ,டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் பேச்சும் எழுத்தும் என்னும் நூல். 5வது பாகம்.மகாராஷ்டிரா அரசாங்கம் அவருடைய கருத்துகளைத் தொகுத்து ,மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட்து இந்த நூல்.1989 லே வெளியிடப்பட்ட்து.அதிலே ‘Unfit for human association ‘.மனம் நொந்து,வெந்து புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்,தன்னுடைய அறிவார்ந்த கருத்துகளை,தன்னுடைய சுய அனுபவங்களை ,சமூகத்தில் பார்த்தவைகளையும்,ஆராய்ந்தவைகளையும்,மிகத் தெளிவாகச்சொல்கிறார்.”தீண்டாமைக் கொடுமை எப்படிப்பட்டது,ஜாதிய வெறித்தனம் எப்படிப்பட்ட்து? எந்த அளவிற்கு வந்திருக்கிறது என்பதற்கு ஒரு சம்பவத்தைச்சொல்கிறார்.இதைக் கேட்கிறபோது,திராவிட மாடலின் சிறப்பு என்ன என்பதனை,இந்த்த் திராவிட இயக்கத்தலைவர்கள் எப்படிப்போராடினார்கள்,இது எப்படி உருவாகியது? இது எப்படி வளர்ந்திருக்கிரது என்பதை ஒப்பிட்டுப்பார்ப்பதற்கும் இது மிக முக்கியமான அடித்தளமாகும்.இது ஆங்கிலத்தில் ,இந்தப் புத்தகத்தில் 29 ம் பக்கத்தில் இருக்கிறது.”ஓடுக்கப்பட்ட மக்கள் மற்றவர்களோடு பழகுவதற்கே தகுதி அற்றவர்களாக ,கொடுமையான ஒரு சமுதாய,,வரணாசிரம தர்மம்,குல தர்மம்,குல அமைப்பு முறை,சாதி பிறவி அடிப்படையிலே இருக்கிறது என்று வெந்து ,நொந்து எழுதியிருக்கிற ஒரு செய்தியை தேசப்பிதா காந்தியார் அவர்கள் எழுதிய நூலில் இருந்து அம்பேத்கர் எடுத்துக்காட்டுகிறார்.பலபேருக்கு,இன்றைய தலைமுறையினருக்கு அதிர்ச்சியாக இருக்கும்.இரண்டு செய்திகளைச்சொல்கிறார். இது இரண்டாவது செய்தி “The next case is equally eliminating.It is a case of an untouchable ,a school teacher in a village in Kathiyawar and it is reported in the following letter which appeared in the Young India,a journal published by Mr Gandhi in its issue of 12th December 1929.1929ஆம் ஆண்டு யங் இந்தியா இதழில் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில் வந்ததை அண்ணல் அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார்.அந்த ஆண்டில்தான்,1929-ல் சுயமரியாதை இயக்கம் சமத்துவத்தை மட்டும் சொன்னது இல்லாமல்,ஜாதிப்பட்டத்தையே தமிழ் நாட்டில் ஒழிக்கவேண்டும் என்று ,நாங்களும் ஜாதிப்பட்டத்தைத் துறக்கிறோம் என்று சுயமரியாதை மாநாட்டில் ஜாதிப்பட்டத்தை துறந்ததை இணையாக இன்னொரு பக்கம் நினைத்துக்கொண்டு இதனைப் பாருங்கள்.
ஜாதியால்- நோயாளியைப் பார்க்க மறுத்த டாக்டர்:
அந்தக் கடிதம் ஒரு இந்து டாக்டர்,தன்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்க்க வர மறுத்ததையும்,அதனால் தனது மனைவியும் குழந்தையும் இறந்து போனதைச்சுட்டிக்காட்டி எழுதிய கடிதம்.மருத்துவத்துறை என்று சொன்னால் ஹிப்பாகரடிஸ் ஓத் என்பது மருத்துவர்களுக்குத் தெரியும்.எல்லோருக்கும் சிகிச்சை வேறுபாடில்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் அந்தக் காலத்திலேயே கிரேக்க நாட்டு அறிஞர் சொன்னார் என்பதால்தான் அவரது பெயராலே அந்த உறுதிமொழி ஏற்றுக்கொள்வது.அந்த ஆசிரியரின் கடிதம் சொல்கிறது.சென்ற டிசம்பர் 5-ம் நாள்,1929,எனக்கு ஒரு குழந்தை பிறந்தது.அந்த ஆசிரியர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சார்ந்தவர். தாழ்ந்தவர் அல்ல,தாழ்த்தப்பட்டவர்.இது புரியாமல் சில பேர் பேசுகிறார்கள்.புரிந்து கொள்ள வேண்டும்.கொடுமையை அன்றைக்குச்செய்தார்கள்.அவர்கள் ஏன் செய்தார்கள் என்பதை உணர்ந்து கோபம் சமுதாயத்தில் வெடிக்க வேண்டும்.5-ந்தேதி குழந்தை பிறந்தது.7-ந்தேதி வயிற்றுப்போக்கு, நெஞ்சு எரிச்சல் போன்றவற்றால் என் மனைவி துன்பப்பட்டாள்.ஒரு டாக்டரை அழைக்கப்போனேன்.நீ கீழ் சாதி,உனது வீட்டிற்கு வரமுடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டார்.அரிசன் என்ற வார்த்தை அம்பேத்காருக்கு உடன்படாத வார்த்தை .என்றாலும் காந்தி பயன்படுத்திய அதே வார்த்தையை அம்பேத்கர் இங்கே பயன்படுத்துகிறார்.டாக்டர் வரமுடியாது என்று சொல்லிவிட்டார்.அங்கு இருந்த கிராமசபைக்கு சென்று டாக்டரை வரவைப்பதற்கு அந்த ஆசிரியர் கெஞ்சுகிறார்.மருத்துவ கட்டணம் 2 ரூபாய் உறுதியாக கொடுத்துவிடுவார் என்று சொல்லச்சொல்கிறார்.கிராமசபைக்காரர்கள் சொன்னதால் டாக்டர் வருவதற்கு ஒப்புக்கொள்கிறார்.ஆனால் அந்த அரிஜன் காலனியை விட்டு வெளியே குழந்தையைக் கொண்டு வந்தால்தான் நான் பார்ப்பேன் என்று சொல்கிறார்.தனது மனைவியை காலனியை விட்டு,பச்சைக்குழந்தையோடு அழைத்து வருகின்றார்.அழைத்து வந்தால், நோயாளியான தனது மனைவியை நேராகப் பார்க்கவில்லை. அவர் தனது தெர்மாமீட்டரை ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கொடுத்தார்.அவர் என்னிடம் கொடுத்தார். நான் என் மனைவியிடம் கொடுத்து காய்ச்சல் பார்க்கவைத்தேன். பின்னர் திருப்பி இதே மாதிரி, என் மனைவியிடம் இருந்த என்னிடம்,என்னிடம் இருந்து முஸ்லிம் பெண்ணிடம், முஸ்லிம் பெண்ணிடம் இருந்து டாக்டரிடம் தெர்மா மீட்டர் போனது.விளக்கு வெளிச்சத்தில் தெர்மா மீட்டரில் பார்த்த டாக்டர் ,எனது மனைவிக்கு நிமோனியா காய்ச்சல் என்றார். உடனே அங்கிருந்த சென்ற டாக்டர் காய்ச்சலுக்கு மருந்து,மாத்திரைகளை மட்டும் கொடுத்து விட்டார். . மீண்டும் வந்து பாருங்கள் என்று அழைத்தபொழுது டாக்டர் வரவில்லை.அவர் வந்ததிற்கு ரூ 2 கொடுத்தபிறகும் (அந்தக் காலத்தில் 2 ரூயாய் என்பது அதிக மதிப்பு வாய்ந்தது) ,கெஞ்சி அழைத்த போதும் அவர் வரவில்லை.7-ந்தேதி எனது குழந்தையும் மனைவியும் இறந்து விட்டார்கள் என்று அந்த ஆசிரியர் எழுதியிருப்பதை மனம் நொந்து,வெந்து டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். தாழ்த்தப்பட்டவர்களைத் தொடுவதை விட நாங்கள் மனிதர்களாக இல்லாமல் போகிறோம் என்று சாதி இந்துக்கள் நடந்து கொள்வதைக் குறிப்பிடுகின்றார்.
திராவிட மாடலில் நல்வாழ்வுத்துறை
இப்போது அப்படியே திராவிட மாடலுக்கு வாருங்கள். இந்த்த் திராவிட மாடலில் ,மக்கள் நல்வாழ்வுக்கு என்று வரக்கூடிய இந்த வாய்ப்புகளில் ,’Democratising care ‘ என்று எழுதியிருப்பதை நண்பர் முரளிதரன் அவர்கள் கூட முரசொலியின் தலையங்கத்தில் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்கள்.தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில்,ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுப்பாட்டை உருவாக்குவதில் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது.திராவிட மாடல் என்ன செய்த்து? இந்தியாவிலேயே மிகச்சிறந்த அடித்தளக் கட்டமைப்பு-Infra Structure இங்குதான் இருக்கிறது.தமிழ் நாட்டில் மாநில அரசுக்குச்சொந்தமான கட்டிடங்களில் பாதிக் கட்டிடங்கள் சுகாதாரம்,கல்வி சார்ந்தவை.
மத்திய அரசு மிக்க்குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்தாலும் ஆரம்ப நிலை மருத்துவத்தை வழங்குவதை நோக்கியே தமிழ்நாடு தன் நிதியைச்செலவழித்திருக்கிறது.திராவிடர் ஆட்சிகள்,திராவிட மாடல் என்றால் என்ன?.. மக்களுக்கு மருத்துவ வசதிகள் அமைப்பதில் மிக முக்கியமான கட்டமைப்பு இந்த ஆரம்ப நிலைய சுகாதார நிலையங்கள்தான். இந்திய சராசரியோடு ஒப்பிடும்போது ,தமிழ் நாட்டின் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் 27215 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது.ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் 32884 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்தான் இருக்கிறது.இதுதான் திராவிட மாடல்.வளர்ச்சி. தமிழ நாட்டைப் பொறுத்த அளவில் 12 கிராமங்களுக்கு ஒரு சுகாதார நிலையம் இருக்கிறது.இந்தியாவில் 25 கிராமங்களுக்கு ஒரு சுகாதார நிலையம் இருக்கிறது.குஜராத்,மகாராஷ்டிரா மாநிலங்களோடு ஒப்பிட்டால், தமிழ் நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாகவும்,கூடுதல் வசதிகளோடும் செயல்படுகின்றன.மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 89 சதவீத்த்திற்கும் மேலானவை 24 மணி நேரமும் செயல்படுகின்றன.ஆனால் இந்திய அளவில் 39 சதவீதம், (89 சதவீதம் எங்கே? 39 சதவீதம் எங்கே?] மட்டுமே 24 மணி நேரமும் செயல்படுகின்றன.மிக அழகாக திராவிடன் மாடல் புத்தகத்தில் இருக்கும் செய்திதான் இதிலே மொழி பெயர்த்துக்கொடுத்திருக்கிறார்கள்.
இப்படி ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்கி விட்டாலும் அதில் பணி புரியும் மருத்துவர்கள்,செவிலியர்கள்,பல் மருத்துவர்கள்,மருந்து ஆளுநர்கள் தேவை.இதற்கு மருத்துவக்கல்லூரிகள் தேவை.இப்படியான மருத்துவப் பணியாளர்களை உருவாக்குவதிலேயே நாட்டில் இரண்டாவது இட்த்தில் இருக்கிறது தமிழ்நாடு.திராவிட இயக்கம்,கலைஞரின் ஆட்சி,மற்றவர்களின் ஆட்சி சிறப்பாக செயலாற்றியதின் விளைவு இது.இந்திய அரசின் விதிமுறையை விட தமிழ்நாட்டின் விதிமுறை மேலானது. தமிழ் நாட்டில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் இருப்பதற்கு இதுதான் காரணம்.
நீட் தேர்வும் தமிழ் நாட்டின் மருத்துவக்கல்லூரிகளும்
நீட் தேர்வு வந்த்தற்கும் இதுதான் முக்கியக்காரணம்.விளக்கமாகச்சொல்லவேண்டியதில்லை.புரிந்து கொள்ளுங்கள்.இந்திய அரசின் விதிகளின்படி ,2015-ல் தமிழ் நாட்டில் 15 மருத்துவக்கல்லூரிகள் இருந்தால் போதுமானது.நண்பர்களே,அப்போதே தமிழ் நாட்டில் 45 மருத்துவக்கல்லூரிகள் இருந்தன.இந்தியா முழுவதும் 385 மருத்துவக்கல்லூரிகள்தான் இருக்கின்றன என்ற நிலையில் அதில் 12 சதவீதக் கல்லூரிகள் தமிழ் நாட்டில் இருந்தன.அதற்கு அபராதம் என்ன? மத்திய அரசின் தொகுப்புக்கு இங்கிருந்து போகணும்…இட ஒதுக்கீடு அடிப்படையில் கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் சொன்னால்கூட மத்திய அரசு கொடுக்காது.அது வேறு அரங்கத்திலே விவாதிக்கப்பட வேண்டிய செய்தி.எனவேதான் தனியார் மருத்துவக்கல்லூரிகளும் ஊக்குவிக்கப்படுகின்றன என்றாலும் மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் மருத்துவக்கல்லூரி இருப்பதை அரசு உறுதி செய்திருக்கிறது.தரவுகளின் படி தமிழ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் விவரப்படி,தமிழ் நாட்டில் 10 ஆயிரம் பேருக்கு 17.7 மருத்துவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் இந்தியா முழுவதும் பார்த்தால் வெறும் 8.7 மருத்துவர்களே இருக்கிறார்கள்.ஆகவே திராவிட மாடல் என்பது எப்படிப்பட்ட்து?.செவிலியர்கள் எண்ணிக்கை என்று பார்த்தால் தமிழ் நாட்டில் 10000 பேருக்கு 44.4 பேர் இருக்கிறார்கள். இந்திய அளவில் 10000 பேருக்கு 22 செவிலியர்களே இருக்கிறார்கள்.
ஆயிரம் பாரட்டுகள்:
திராவிட மாடல் என்பது எப்படிப்பட்ட்து?. நன்றாக நீங்கள் நினைத்துப்ப்பார்க்கவேண்டும்.எனவே அனைவருக்கும் அனைத்தும்.அதிலும் குறிப்பாக யார் ஒடுக்கப்பட்ட மக்களோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.எனவேதான் அன்றைக்கு கத்தியவாரிலே நடந்த நிகழ்வுக்கு ஜாதி அடிப்படை.ஆனால் தமிழ் நாட்டில் ஜாதி ஒழிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து,சமத்துவத்திற்கு வாய்ப்பு கொடுத்து,கல்வியிலே அவைகளைக் கொண்டுவந்து ,அதைப் பொதுமைப்படுத்தி,இன்னார்க்கு இதுதான் என்பதற்குப் பதிலாக எல்லோருக்கும் எல்லாம் ,’கல்வி நல்கா கசடருக்கு தூக்கு மரம் அங்கே உண்டாம் ‘ என்று சொன்னதைப் போல,மிக முக்கியமாக கல்வி வாய்ப்புகளை எல்லோருக்கும் கொடுத்து சமதர்மப் படுத்தி,குலதர்ம்க்தை அழித்த்து.அதுதான் திராவிட மாடல்.அதிலே இது மட்டும்,ஒரு பகுதி மட்டும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.இதைப் போல பல புள்ளி விவரங்களை எடுத்துச்சொல்லி சிறப்பாக வந்திருக்க்கூடிய இந்த நூல் ,அனைவருக்கும் பரப்பபடவேண்டிய ,செய்திகள் உள்ள நூல். ‘திராவிடத்தால் வீழ்ந்தோம் ‘என்று சொல்கிறவர்கள் எவ்வளவு பெரிய தவறு இழைத்தவர்கள் என்பதை அறிய இந்த நூலைப் படிக்கவேண்டும். “பொய்யிலே முக்காற்படி,புரட்டிலே காற்படி,வையகம் ஏமாறும் படி வைத்துள்ள நூற்களை ஒப்புவது எப்படி “ என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்களே,அதுபோல அந்தக் கருத்துகளை எல்லாம் தள்ளுபடி செய்து ,நூலைப் படி,அறிவைப் படி என்று சொல்லத்தக்க அளவிற்கு இதனைப் படியாகக் கொள்ளுங்கள். இதனைப் போல அறிஞர்களே பல நூல்களை எழுதுங்கள்.இவர்களைப் பின்பற்றுங்கள்.உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வாருங்கள்.அதற்காக நூல் ஆசிரியர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள்,வெளியிட்டவர்கள் உட்பட.நன்றி." என்று குறிப்பிட்டு அய்யா ஆசிரியர் அவர்கள் ஏறத்தாழ 1 மணி நேர்த்திற்கு மேலாக உரையாற்றினார்கள்.
அய்யா ஆசிரியர் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவித்து,’வாருங்கள் படிப்போம்’ குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேரா.உமாமஹேஸ்வரி உரையாற்றினார்.கேள்வி பதில் நிகழ்ச்சியில் ,கேட்பாளர்களின் கேள்விகளுக்கு அய்யா ஆசிரியர் அவர்கள் பதில் அளித்தார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு,உணர்ச்சிகரமாக தனது கருத்தினை நிகழ்வில் பதிவு செய்தார்கள்.
(நிறைவு பெற்றது)
நன்றி : விடுதலை
No comments:
Post a Comment