மேற்கண்ட நூல்களின் ஆசிரியர், மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகச்செயலாளர் அண்ணன் கி.தளபதிராஜ் அவர்களோடு நேற்று நடந்த கலந்துரையாடல் மனம் நிறைவான நிகழ்வாக அமைந்தது.கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தயங்காமல் விறுவிறுவென்று தளபதிராஜ் அவர்கள் பதில் கூறினார். நிகழ்வினை ஒருங்கிணைத்த வாருங்கள் படைப்போம் குழுவின் ஒருங்கிணப்பாளர் எழுத்தாளர் வினிதா மோகன்,சிறுகதை எழுத்தாளர் -இசைக்கலைஞர் அண்ணன் லோ.குமரன், கவிஞர் கலையரசி பாலா,ஒருங்கிணைப்பாளர் மங்கையர்க்கரசி ஆகியோருக்கு நன்றியும் மகிழ்ச்சியும். வாருங்கள் படிப்போம்,வாருங்கள் படைப்போம் குழுவின் நிறுவனர் முனைவர் அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள் தன்னுடைய பின்னோட்டத்தை நெகழ்ச்சியாக வழங்கினார்.அதனைப்போலவே அண்ணன் லோ.குமரன்,தங்கை புதுக்கோட்டை சுப.சுசிலா ஆகியோர் கருத்துரைத்தனர். கேள்விகள் கேட்டனர். பெரியார் பன்னாட்டு அமைப்பு,அமெரிக்காவின் இயக்குநர் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்தினார். இரத்தினம் இராமசாமி அவர்கள் அழகிய பின்னோட்டத்தை 'வாருங்கள் படிப்போம்'வாட்சப் குழுவில் வழங்கியுள்ளார்.'நேர்காணல் மிக நன்றாக இருந்தது அப்பா' என்ற எனது மகன் சொ.நே.அன்புமணியின் பாராட்டும் மகிழ்ச்சி அளித்தது.
இது ஓர் இணைந்த பயணம். இக்குழு இலக்கியப்பயணத்திற்கு வழிகாட்டும் குழு.எழுதுவது எப்படி என்பதை வகுப்பு எடுக்காமலேயே உறுப்பினர்களுக்கு புரியவைக்கும் குழு.அனுபவப் பகிர்வால் கேட்பவர்களைத் தானே எழுத வைக்கும் குழு.மலேசியாவில் நடுநிசி எனினும் நிகழ்வில் முழுமையாக கலந்துகொண்ட காந்தி முருகன் போன்றவர்களின் பங்களிப்பும் , கலந்து கொண்டவர்களின் ஒவ்வொருவரின் பங்களிப்பும் நன்றிக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது.நன்றி தோழமைகளே...
கீழ்க்கண்ட இணைப்பில் வாருங்கள் படைப்போம் குழுவில் நடைபெற்ற முழு உரையாடலும் உள்ளது. விருப்பம் இருப்பவர்கள் கேட்கலாம்.
https://www.youtube.com/live/w2DpNSPHpYc?si=9o6Fhog9mK9uQyo_

