Saturday 1 October 2022

மீண்டும் மீண்டும் உன்னைச்சுடுகிறார்கள்...

 அன்பிற்கினிய காந்தியே...

ஆத்மா எனும்

சொல்லில் எனக்கு

உடன்பாடில்லை 

ஆதலால் 

மகாத்மா என்னும் சொல்லால்

உன்னை நான் அழைப்பதில்லை...


ஆனால்... காந்தியாரே...

நீங்கள் ஒரு மகத்தான மனிதர்

என்பதில் எனக்கு எந்தவித

மாற்றுக்கருத்தும் இல்லை....


கொள்கையில் முரண்பட்ட

அண்ணலும் அய்யாவும் கூட

தனிமனிதராய் உங்களுக்குத் 

தந்திட்ட மரியாதையும்

மதிப்பும் மிக அதிகம்...


நீ இறந்தும் கூட

75 ஆண்டுகள் ஆகப்போகிறது...

உன்னைக் கொன்றவர்களின்

கூட்டாளிகள்தான் 

இன்றைக்கு ஆட்சிக்கட்டிலில்...


உந்தன் பெயரில் இருக்கும்

நிறுவனங்களில் கூட

கோட்சேகளின் வாரிசுகள்தான்

கோலோச்சுகிறார்கள்...


கோட்சேகளின் வாரிசுகள்

மீண்டும் மீண்டும்

சுடுகிறார்கள் உங்களை...

உங்கள் பெயரில் இருக்கும்

பள்ளிகளில் படித்தவர்கள்கூட

வெறுப்பினை அள்ளிக் கொட்டுகிறார்கள்...


இரத்த வெறி பிடித்து

அலைகிறார்கள்

சனாதனத்தை மீண்டும்

அமைத்தே தீருவோம்

அதற்கு இடைஞ்சலாக இருக்கும்

அரசியல் சட்டத்தை 

மாற்றி அமைப்போம் 

எனக் கொக்கரிக்கிறார்கள்...


இல்லாத கடவுளைக் 

காலமெல்லாம் 

கட்டிக்கொண்டு அழுத

காரணத்தாலோ என்னவோ

நீ கூறிய இராம் இராம்

பெயரைச்சொல்லியே

மீண்டும் மீண்டும் 

உன்னைச்சுடுகிறார்கள்...


உன்னைக் கொன்ற

சித்பவன் பார்ப்பான்

கோட்சேவுக்கு சிலைவைத்துக்

கொண்டாடுகிறார்கள்...

கோளாறு வயப்பட்ட 

சில மாமிகள்

கோட்சே புகழ் பாடுகிறார்கள்...


மதத்தால் மனிதர்கள்

மாற்றி மாற்றி 

வெட்டி சாய்த்து 

குருதி ஓடிய மண்ணில்

நடந்து சென்ற காந்தியே!

அப்போது கூட இந்த மதங்கள்

மனிதர்களுக்குத் தேவைதானா

எனும் கேள்வி 

எழவில்லையா தங்களுக்கு...


பிணங்களால் நிரப்பப்பட்ட

இரயில் பெட்டிகள்

வந்து சேர்ந்து நேரத்திலும்...

இழவைக் கூட்டுவதுதான்

இந்த மதங்கள் என்னும்

நினைப்பு வரவில்லையா தங்களுக்கு...


அடுத்த மதத்துக்காரனின்

பெண்களை வன்புணர்வு

செய்வதே

பழி தீர்க்கும் படலம் என

அவனவன் அவனவனின்

கடவுளின் பெயரால்

செய்த கயமைகள் 

கண்ட போதும் காந்தியே...

கடவுள்களின் கையாலாகாமை

புலப்படவில்லையா தங்களுக்கு...


எத்தனை பரிசோதனைகள்

செய்தாய் உன் வாழ்க்கையில்...

கடவுள் என்று ஒருவன்

இருக்கிறானா? என்னும் கேள்வியோடு

எந்த சோதனையும் நீ 

செய்ததாக எனக்கு நினைவில்லை..


சத்திய சோதனை எழுதிய

தாங்கள்

நான் உணர்ந்த அளவில்

நிகழும் நிகழ்வுகளால்

கடவுள் என்று ஒருவன் இல்லை

இல்லவே இல்லை

என உரக்கக் கூறி இருந்தால்

ஒருவேளை இந்தியா

உருப்பட்டிருக்க வழி பிறந்திருக்குமோ!..


                          வா.நேரு,

                          02.10,.2022.

5 comments:

மேலை சு சுசிலா said...

அருமையான பதிவு அண்ணா. பாராட்டுக்கள்

Anonymous said...

மகிழ்ச்சி... நன்றி

முனைவர். வா.நேரு said...

மகிழ்ச்சி... நன்றி

Anonymous said...

//அப்போது கூட இந்த மதங்கள்
மனிதர்களுக்குத் தேவைதானா
எனும் கேள்வி
எழவில்லையா தங்களுக்கு...
//

இன்னும் கொஞ்சநாள் உயிரோடு விட்டிருந்தால் காந்திக்கு இந்தக் கேள்வி எழுந்திருக்கும். அதனால் தான் விரைவில் தீர்த்துக் கட்டப்பட்டார்.

முனைவர். வா.நேரு said...

தாங்கள் சொல்வது உண்மைதான். நன்றி தங்கள் கருத்திற்கு