வாருங்கள் படைப்போம் குழுவின் சார்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் அய்யா பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களைப் பேட்டி காணும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்காகக் கடந்த சில நாட்களாக அவரின் பெரும்பாலான படைப்புகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்வு முடிந்தவுடன் வந்த வாட்சப் குழு பின்னோட்டங்கள் மகிழ்ச்சி அளித்தன.
நிகழ்வில் கலந்து கொண்ட தோழர் மு.சங்கையா நிகழ்வு முடிந்தபின்பு செல்பேசியில் அழைத்து நிகழ்வினைக் குறித்துப் பேசிப் பாராட்டினார். உங்கள் கேள்விகளில் மிக முதிர்ச்சி இருந்தது தோழர், மிக நன்றாக இருந்தது,அவரின் பல பரிமாணங்களை அறிந்து கொள்ள முடிந்தது என்றார்.
நிகழ்வினை யூ டியூப்பில் கேட்டு ,கவிஞர் சமயவேல் அவர்கள் அய்யா ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் படைப்புகளைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். நானும் அவரும் ஒரே பகுதி கிராமத்தைச்சார்ந்தார்கள் என்று கூறியதோடு அவரை நேரில் சந்தித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வினை யூ டியூப்பில் கேட்ட எங்கள் கல்லூரிப் பேராசிரியர், நான் பெரியாரியலை நோக்கி முறையாக வருவதற்கு பாதை வகுத்து அளித்த பேரா.கி.ஆழ்வார் அவர்கள்(முன்னாள் ஆங்கிலத்துறைத்தலைவர்,திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ), நிகழ்வினை முழுமையாகக் கேட்டேன் நேரு, நன்றாக இருந்தது என்று சொன்னதோடு பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கல்லூரிப்பேராசிரியராக இருந்த காலத்திலேயே அய்யா ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் அவ்வளவு எளிமையாகவும் ,சக ஆசிரியர்களோடு ,மாணவர்களோடு தோழமையாகவும் இருப்பார் என்றும் குறிப்பிட்டார்.
அவரோடு கலந்துரையாடிய உரையாடல் கீழ்க்காணும் சுட்டியில். பாருங்கள்.
https://www.youtube.com/live/H_GzTnDdyFQ?si=8zMvP3yR079EUwUF
No comments:
Post a Comment