ஏதேதோ படிக்கும்
நேரங்களில் எல்லாம்…
கொள்கைகளை இணையத்தில்
பேசும் நேரங்களில்
எல்லாம்…
கதைகளை கவிதைகளை
படித்துவிட்டு
இதற்குள்
என்ன சொல்லவருகிறார்கள்
என்று சிந்திக்கும்
போதெல்லாம்…
சாவது ஒருமுறைதான்
கொள்கைக்காகத்
துணிந்து
பேசி..எழுதிச்
சாவோமே எனத்
துணிவு கொள்ளும்
நேரமெல்லாம்...
பளிச்சென என் மனதில்
தோன்றும் முகம்
அய்யா அறிவுக்கரசுதான்!
முரட்டு மீசைக்காரார்
..
கொள்கையிலும் அப்படித்தான்
வெட்டு ஒன்று துண்டு
இரண்டு!
ஒத்துவராத உறவுகளைத்
துணிந்து துறந்தவர்
!
பாசிசக் கொள்கைக்காரனை
மேடையில் விட்டுத்
தன்
பேச்சால் வெளுத்தவர்!
பெரியாரியலைத்
தவிர வேறு
ஏதும் எழுதேன்
எனத் தன்
பணி ஓய்வுக்குப்
பின்
எழுதிக் குவித்தவர்!
அய்யா அறிவுக்கரசு
அவர்களின்
முதலாம் ஆண்டு
நினைவு நாள் இன்று!
தந்தை பெரியார் கொள்கை வழியில்
அய்யா ஆசிரியர் சுட்டும் திசையில்
பணியாற்ற வழிகாட்டியாய்..
பழகிய விதத்தில் ஒத்தவயது
நல்ல நண்பரைப் போல்
உரிமையோடு பழகியவர் அவர்...
ஒப்புக்காகச் சொல்லவில்லை!
நான் எழுதும் நேரமெல்லாம்
கொள்கையைப் பேசும்
நேரமெல்லாம்
என்னோடுதான் இருக்கின்றார்
அவர் !
என்றாலும் நினைவு
நாளில்
புகழ் வணக்கம்
செலுத்துகிறோம்
அய்யா அறிவுக்கரசுவிற்கு…
வா.நேரு, 22-01-2025
2 comments:
வான்நோக்கும் வாள்மீசை! பார்க்கும் பார்வை
வளையாத நேர்கோடு! ஆய்ந்து தேர்ந்தே
தான்கண்ட தத்தனையும் தமிழர் வாழ்வின்
தரங்கூட்டத் தந்துநின்ற தாயின் மாற்று!
கான்கண்ட பனையின்பூ! திங்கள் நாள்கள்
கணக்காக வரைந்துவைக
த்தக் காலக் கோடு!!
ஊன்கொண்ட உயிர்தந்தே பெரியார் கொள்கை
உலகெல்லாம் பரப்பிநின்ற வள்ளல் வாழ்க!!
"ஊன்கொண்ட உயிர்தந்தே பெரியார் கொள்கை
உலகெல்லாம் பரப்பிநின்ற வள்ளல் வாழ்க!" ..உண்மை.அய்யா அறிவுக்கரசு வாழ்க!.
Post a Comment