புத்தகங்களுடன் புத்தாண்டு என்று பெரியார் திடலில் ,பெரியார் புத்தக நிலையத்தில் சிறப்புத் தள்ளுபடியுடன் கொண்டாட்டம்..
புத்தாண்டைப் புத்தகத்துடன் கொண்டாடுவோம் என்று மதுரையில் நியூ செஞ்சரி புத்தக நிலையத்தில் ,மதுரையின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள்,கவிஞர்களோடு இணைந்து நடக்கும் கொண்டாட்டம்.
இன்னும் சில அமைப்புகளும் ,பதிப்பகங்களும் புத்தாண்டைப் புத்தகத்தோடு வரவேற்கும் நிகழ்ச்சிகளை அமைத்துள்ளார்கள்.
புத்தகத்தோடு 2026 புத்தாண்டை வரவேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புத்தகத்தை விட உற்சாகம் அளிக்கின்ற,உத்வேகம் அளிக்கின்ற,நம்மை நமக்கே உணர்த்துகின்ற,நம்மை மேம்படுத்துகின்ற இன்னொன்று உலகில் உண்டா என்ன?...
ஒரு புதிய புத்தக வாசிப்போடு ,2026 புத்தாண்டை வரவேற்போம்...அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...


No comments:
Post a Comment