போராட்டமே இரத்த ஓட்டமாய்
(முனைவர் வா.நேரு)
மார்ச் 8 உலகப் பெண்கள் நாள்.பெண்ணாகப் பிறந்ததால் மட்டுமே பல கொடுமைகளைத் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பெண்கள் பலர்.பெண்களை வெறும் சதைப் பண்டங்களாக மட்டும் பார்த்து, அவர்களின் வாழ்க்கையை முழுவதுமாக அழிக்கும் கொடுமைகள் உலகில் நடந்து கொண்டேயுள்ளன. திடீர் திடீரென்று இளம்பெண்கள், சிறுமிகள் காணாமல் போகும் நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளில் நடந்து கொண்டுள்ளன.
உலகம் முழுவதும் பெண்கள்,சிறுமிகள் காணாமல் போவது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.புதுடில்லியில் ஜனவரி முதல் தேதியிலிருந்து 15-ஆம் தேதிக்குள் 509 பெண் குழந்தைகள் மற்றும் பெண்களைக் காணவில்லை என்று புள்ளிவிவரம் கூறுகின்றது.இதற்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துக் கண்டுபிடியுங்கள் என்று சொல்லி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணாமல் போகும் எண்ணிக்கை 8324. ஒவ்வொரு நாளும் அந்த மாநிலத்தில் 23 பெண் காணாமல் போகிறார்கள் என்று மத்திய அரசின் புள்ளி விவரமே குறிப்பிடுகிறது.
அண்மையில் வெளிவந்த எப்ஸ்டீன் பைல்கள் உலகையே திடுக்கிட வைத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்ட எப்ஸ்டீன் சம்பந்தப்பட்ட வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் இந்த உலகத்தின் பல நாடுகளின் தலைவர்கள்,ஆட்சியாளர்கள் எப்படிப்பட்ட அயோக்கியர்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. மிகப்புகழ் பெற்றவர்கள் பலரின் இருண்ட பக்கங்களையும் இந்த எப்ஸ்டீன் பைல்கள் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன. சிறுமிகளைக் கடத்திச்சென்று கட்டாயப் பாலியலுக்கு உட்படுத்தும் ஒருவனோடு, ஒரு கூட்டத்தோடு பலர் வைத்திருந்த தொடர்பு என்பது திடுக்கிட வைத்துள்ளது.இதற்குத் தீர்வு என்ன?,இப்படிப்பட்டவர்கள் எப்படி ஆட்சிக்கு, அதிகாரத்திற்கு வருகிறார்கள்?எப்படி ஆட்சியில்,அதிகாரத்தில் நிலைத்து நிற்கிறார்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.
அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு ட்ரம்ப் சர்வாதிகார மன நிலையில் இருக்கின்றார்.பல உலக நாடுகளுக்கு வரியை தாறுமாறாக விதித்துள்ளார்.நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம்.அமெரிக்கா
நம்மைச் சுற்றி இருக்கும் மடமை இருளைக் குறிப்பிட கறுப்பு நிறத்தில் கொடியினை வடிவமைத்த தந்தை பெரியார் அவர்கள்,தனது இறுதி இலக்காக,தாம் அடைய விரும்பும் இலட்சியம் பொதுவுடமை என்பதைக் குறிக்கச் சிவப்பு வட்டத்தை ,கறுப்புக் கொடியின் நடுவில் இடம் பெறச்செய்தார்.பொதுவுரிமையும் பொதுவுடமையும் ஏற்படவேண்டும் என்று முழக்கமிட்டார்.
பாலியல் தொழிலுக்குள் பெரும்பாலான பாலியல் தொழிலாளிகள் கட்டாயப்படுத்தப்பட்டும், வாழ வழியில்லாத நிலையிலும் தள்ளப்படுகிறார்கள்.முதலாளித்து
காணாமல் போகும் பெண்களில் நாளை நம் வீட்டுச்சிறுமிகளும் இடம்பெறலாம்.இதனைத் தடுப்பது எப்படி எனில், முதலாளித்துவச் சமூகம் என்பது பெண்ணை வெறும் சதைப்பிண்டமாகவே பார்க்கும், பாலியல் பொருளாகவே பார்க்கும்.அதனை மாற்றி ‘எல்லோருக்கும் எல்லாம் ‘என்னும் பொதுவுடமை இலக்கை நோக்கி உலகம் நடைபோடவேண்டும்.
வரலாற்றில் நாம் படிக்கின்றோம். போரில் வென்ற மன்னர்கள் செய்யும் முதல் செயல், தோல்வியுற்ற நாட்டில் இருக்கும் பெண்களைக் கொடுமைப்படுத்துவது,பாலியல் பலாத்காரம் செய்வது. அன்று முதல் பெண் என்பவள் போகப்பொருளாகவே கருதப்படுகிறாள், நடத்தப்படுகிறாள். அடிமைப்படுத்தப்படுகிறாள்.
உலக அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ,மூன்று பெண்களில் ஒருவருக்கு நடப்பதாகப் புள்ளி விவரம் குறிப்பிடுகிறது/ உடல் ரீதியான வன்முறை,மன ரீதியான வன்முறை, பாலியல் ரீதியான வன்முறை,இணைய வழியிலான வன்முறை என்று பெண்களை இந்த ஆண்களின் உலகம் துன்புறுத்திக்கொண்டே இருக்கிறது.அண்மையில் மத அடிப்படையில் அமைந்த ஆப்கானிஸ்தான் அரசின் நீதிமன்றம்,காயம் இல்லாமல் பெண்களை அடிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
மதமற்ற,சாதியற்ற ஒரு பொதுவுடமை உலகமே பெண்களுக்கு முழுப் பாதுகாப்பைத் தர இயலும். ஆனால் அந்தப் பொதுவுடமை உலகுக்கு எதிரான கருத்துகளை மதமென்னும் போர்வையில் தொடர்ச்சியாக மதவாதிகள் பெண்களிடம் பரப்பிக்கொண்டுள்ளனர்,.அதற்குப் பெண்களும் பலியாகின்றனர்.மதமே பெண் அடிமைத்தனத்திற்கு அடிப்படை என்பதைத் தந்தை பெரியார் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தார்கள். ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை’ என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி கடவுள் மறுப்பு வாசகங்களை உலகுக்குக் கொடுத்தார்கள்.
பெண் விடுதலை என்பது இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.ஆண்கள் தங்களுக்காக அமைத்துக்கொண்ட உலகத்தில் பெண்களை வெறும் சதைப் பண்டங்களாகவே இன்று வரை வைத்துள்ளனர்.தங்களுக்கு எதிரான செயல்பாடுகளைப் பெண்கள் உணர்வதும்,அதனை எதிர்ப்பதற்குத் தங்கள் குழந்தைகளுக்கு இளம்வயது முதலே அந்த உணர்ச்சியை ஊட்டுவதுமே எதிர்கால உலகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பாக ஆக்கும்.அதற்குப் பெண்களின் மத்தியில் தொடர்ச்சியான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைக் கொண்டு செல்லவேண்டும்.
‘அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப் போராடாமல் அநீதி களைய முடியாது ‘ .இது வெறும் முழக்கம் மட்டுமல்ல, இதுதான் செயல்முறை.போராட்டம் இரத்த ஓட்டமாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும். ‘கடவுள் நம்மை ஆண்களுக்கு அடங்கி நடக்கத்தான் படைத்தார் ‘ என்னும் எண்ணம் பெண்கள் மனதில் இருந்து நீங்கி, நாமும் ஆண்களுக்கு நிகரானவர்கள்தான் என்ற எண்ணம் ஓங்கவும், அநீதிகளுக்கு எதிராகப் போராடவும் ,’பெண்ணே, பெண்ணே,போராடு பெரியார் கொள்கையின் துணையோடு’ என்னும் முழக்கத்தை ஒலிக்கும் நாளாக மார்ச் 8 ,உலகப் பெண்கள் நாள் அமையட்டும்.
அனைத்துப் பெண் தோழர்களுக்கும் இனிய உலகப் பெண்கள் நாள் வாழ்த்துகள்.
நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் மார்ச் 1-15,2026

