Sunday, 22 March 2026

வீரவணக்கம் செலுத்துகிறேன் நான் !

 

நான் ஏன்

நாத்திகன் ஆனேன்..

தோழர் பகத்சிங்-சின்

ஒப்புதல் வாக்குமூலம்

ஆண்டுகள் பல கடந்தபின்பும்

பசுமரத்தாணி போல் நிற்கிறது..

 

கோயில்கள் போரடித்துவிட்டன..

சமாதிகளைத் தேடி மக்கள்

கூட்டம் கூட்டமாகச் சென்று

வழிபாடு நடத்த புதிய புதிய

ஊடகங்கள் வழிவகுக்கின்றன?..

உழைக்கும் மக்கள் ‘கடவுள் எனும்

மாயை ‘ நோக்கி ஓடும்

விட்டில் பூச்சிகளாய்

ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்…

 

இத்தனை அறிவியல்

கண்டுபிடிப்புகளுக்குப் பின்பும்

கடவுள் மட்டும் இன்னும்

ஏன் சாகாமல் இருக்கிறார் ?

என்னும் கேள்விக்கு விடை

தோழர் பகத்சிங்-கின்

புத்தகத்திற்குள் இருக்கிறது….


மனிதத்தைத் தேடும்

மானுடர்களுக்கெல்லாம்

நாத்திகம் ஒன்றே

விடையாய் நிற்கிறது…

 

தோழர் பக்த்சிங்-கும்

அவரது தோழர்களும்

வீரவணக்கம் அடைந்த

இந்த நாளில் …

தோழரின் புத்தகத்தை

வாசிப்பதன் வழியாக

அவரின் வினாக்களுக்குள்..

விடைகளுக்குள் மூழ்கி

வீரவணக்கம் செலுத்துகிறேன் நான் !



 

                                       வா.நேரு, 23.03.2026


No comments: